எல்லா காலங்களிலும் அடையாளம் கண்டுகொள்ளபட்ட கிறிஸ்து Topeka, Kansas USA 64-0617 1ஒரு சில வசனங்களை இன்று இரவு பார்க்கும்படியாக வைத்திருக்கிறேன். இந்த கூடுகைக்கான பொருளைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். வேதத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க விரும்புகிறேன். ஏனெனில் தேவனுடைய வார்த்தையானது எல்லா கூட்டங்களிலும் வாசிக்கப்பட வேண்டும் என்று விசுவாசிக்கிறேன். அவருடைய வார்த்தையை வாசிக்காமலே அவர் நம்மை சந்திப்பார் என்று அறிவேன். இருந்தாலும் எங்கேயாவது தவறு செய்து விடுவேனோ என்ற பயம் எனக்கு உண்டு. ஆகவே அவருடைய வார்த்தையை வாசிக்கும் பட்சத்தில் அதில் எந்த தவறும் இருக்காது என அறிவேன். அவருடைய வார்த்தையை வாசிக்கிறதினிமித்தம் இக்கூட்டத்தில் ஏதாவது காரியம் நடக்கும் என்று அறிந்திருக்கிறேன். அதினால் தான் அவருடைய வார்த்தையை வாசிக்கிறேன். 2ஆகவே நம்முடைய எண்ணங்களை வேதத்தின் மேல் ஆதாரப்படுத்தி பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம் 10-ம் அதிகாரம் 32-ம் வசனம் முதல் 39 முடிய, மற்றும் நாம் அதிகம் அறிந்துள்ள வசனம் எபிரெயர் 13:8 ஆகிய வசனங்களை வாசிக்கலாம். இப்பொழுது பரிசுத்த யோவான் 10-ஆம் அதிகாரம் 32-ல் இவ்விதம் வாசிக்கிறோம். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக; நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிற படியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார். இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, மற்றும் எபிரெயர் 13-ஆம் அதிகாரம்,8-வது வசனம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 3நாம் ஜெபிக்கலாம். பரலோகப் பிதாவே, இந்த செய்திக்காக செய்தியாளனையும் மற்றும் இந்த வார்த்தையை கேட்கிறவர்களையும் இந்த இரவிலே பரிசுத்தப்படுத்தும் கர்த்தாவே. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் ஆமென். 4“எல்லா காலங்களிலும் அடையாளம் கண்டுக்கொள்ளப்பட்ட கிறிஸ்து” என்ற தலைப்பை அனுக நான் விரும்புகிறேன். இது முதலாம் இரவாய் இருப்பதினாலே நாம் நன்றாய் பரிட்சயமாகும்படிக்கு சற்று மேலோட்டமான தலைப்பை எடுத்திருக்கிறேன். இப்பொழுது எபிரெயர் புத்தகம் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறுகிறது. இந்த யூதர்கள் அவரைக் கேள்வி கேட்டார்கள் என்று வேதத்தில் நாம் வாசித்தோம். கிரேக்கர்களும் அவரைக் கேள்வி கேட்டார்கள் என்று நாம் பார்க்கிறோம். அது தொடர் கேள்வியாக இருந்தது. ஏனென்றால் பல்வேறு மக்கள் அவரைக் குறித்து பல்வேறு வியாக்கியானங்களைக் கொண்டிருந்தார்கள். 5எப்போதாவது அவரைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அவரைக் காண வேண்டும் என விருப்பம் கொள்ளாதவர் ஒருவரும் இல்லை. இன்று இரவு “எத்தனை பேர் இயேசுவைக் காண விரும்புகிறீர்கள்?” என்று நான் கேட்பேனாகில் நிச்சயமாக ஒவ்வொரு கையும் மேலே உயரும். அவரைப் பற்றி கேள்விப்பட்டவர்களில் அவரைக் காண விருப்பம் கொள்ளாதவராக ஒரு நபரும் இருக்கவில்லை. அவருடைய நாமத்திலும் கூட ஏதோ ஒரு காரியம் இருக்கிறது. அது நம்மை அவ்வளவாய் கவர்ந்திழுக்கிறது. 'இயேசு' என்ற பெயரைக் கேட்டாலே நம்முடைய இருதயத்தை சிலிர்க்கவைக்கும்படி ஏதோ ஒன்று அதில் இருக்கிறது. ஏனென்றால் அந்த நாமத்திலே நமக்குப் பாவ மன்னிப்பு இருக்கிறது, நம்முடைய மீட்பு இருக்கிறது, பரலோகத்தில் உள்ள முழு குடும்பமும் அந்த நாமத்தைத் தரித்திருப்பார்கள். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டபோது இந்த மனித பெயரையே தம் மேலாகச் சூட்டும்படியாக தெரிந்து கொண்டார். என்ன ஓர் அற்புதமான பெயர். 6இப்பொழுது நாம் அவரை மிகவும் மகத்தானவர் என்று எண்ணுகிறோம். காலங்களினூடாக எல்லா மனிதரும்; தேவனைக் காண கதறினார்கள். யோபுவின் காலம் முதல் இருந்து வந்த பிரச்சனை அதுவே... வேதாகமத்தில் உள்ள யோபுவின் புத்தகம் தான் மிகப் பழமையான புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று நினைக்கிறேன். அது அவ்விதமாகப் பொருத்தப்பட்டது.அது மோசேயின் காலத்தில் எழுதப்பட்டது. முதல் நான்கு புத்தகங்களை மோசே எழுதினார். யோபு ஒரு முறை, “அவரை மட்டும் நான் பார்க்கக் கூடுமானால்‚ அவருடைய வாசஸ்தலம் எங்கே இருக்கிறது என்று நான் அறிந்தால்; நான் அங்கே செல்ல வாஞ்சிக்கிறேன்” அல்லது இன்னொரு விதத்தில் சொல்லவேண்டும் என்றால் “நான் சென்று அவருடைய கதவைத் தட்டுவேன்” என்று கதறினான் என்று நாம் விசுவாசிக்கிறோம். 7நாம் ஏதோ ஒரு திரைக்குப் பின்புறமிருந்து... நாம் எங்கிருந்தோ வந்தோம். நாம் எல்லோரும் எங்கேயோ இருந்து வந்தவர்கள் என்று அறிவோம். நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அடையும் படி முயற்சிக்கிறது. நம்மை உருவாக்குகின்ற ஏதோ ஒன்று நமக்குப் பின்னாக இல்லாமல், நாம் இருப்பது போன்று இருந்து கொண்டிருக்க முடியாது. என்னுடைய கைகடிகாரமானது அப்படியே தோன்றியிருக்க முடியாது. கைகடிகாரமோ, பொருத்தப்படும் கல்லோ, அல்லது கால அளவை செய்வதோ, விதிமுறைகளோ, கம்பிச் சுருள்களோ, கடிகார முட்களோ, எதுவுமே தானாக உருவாகவில்லை என்று சரியான சிந்தனையுடைய எந்த மனிதனும் அறிந்திருப்பான். அது தானாகவே உண்டாக சாத்தியம் இல்லை. 8மற்றுமுள்ள படைப்புகளைப் பாருங்கள். அவை எல்லாம் எப்படி ஒன்றாய் அமைக்கப்பட்டுள்ளன. அது தானாகவே ஏற்படவில்லை என்று நாம் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க ஒரு கைகடிகாரத்தைக் காட்டிலும் மனிதன் எவ்வளவு மேன்மையானவனாய் இருக்க வேண்டும். கைக் கடிகாரத்தை மனிதன் வடிவமைத்து, அதில் நேர அளவைப் பொருத்துகிறான். ஒரு கடிகாரத்தினால் தானாக உருவாக இயலாது என்றால், நீங்களும் நானும் இங்கே தானாக ஏற்பட்டோம் என்பது எவ்வளவு மகத்தானதாய் இருக்க வேண்டும்? நமக்குப் பின்னால் ஒரு சிருஷ்டிகர் இருந்தாக வேண்டும். அவருடைய மகத்தான படைப்புகளை கவனிக்கக் கூடுமானால் அது எவ்விதம் இயங்குகிறது என்பதையும் அதில் அவர் ஜீவிக்கிறதையும் நாம் காணமுடியும். அவர் அதில் ஜீவிக்கிறார்‚ ஒரு இலையைக் கவனிப்போமானால், அது எப்படியாய் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தின் மத்திய பகுதியில் உறைபனி இறங்குவதற்கு முன்னால் அந்த ஜீவனானது வேருக்குள்ளாக சென்று விடுகிறது. அந்த இலையோ கீழே நிலத்தின் மேல் விழுகிறது. இது என்ன காரியம்? ஏதோ ஓர் ஞானம் அதனோடே பேசுகிறது. ஆனால் மரத்திற்கோ சொந்த அறிவு கிடையாது. ஆகையால் அந்த ஜீவனானது குளிர் சீதோஷணத்திலிருந்து தன்னை மறைத்துக் கொள்ளும்படி வேருக்குள்ளாக சென்றுவிடுகிறது. அது மேலேயே தங்கி இருக்குமானால் குளிர்காலம் அதைக் கொன்றுபோடும், அது மரிக்கநேரிடும். 9இப்பொழுது அந்த இலைக்கு என்ன நேரிடுகிறது? அது நிலத்தின் மேலேயே கிடந்து மட்கி அழிகிறது. ஆனால் அந்த வேருக்குள்ளாக இருக்கிற ஜீவன் என்ன செய்கிறது? அது மரித்த இலையிலுள்ள சாரத்தை உறிஞ்சி, கால்சியம் மற்றும் அதற்குள்ளாக இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வசந்த காலத்தில் மீண்டுமாக இன்னொரு இலையை துளிர்த்து அதினுடைய இடத்திற்கு வந்தடைகிறது. இவை எல்லாமே மரணம், அடக்கம் மற்றும் உயிர்தெழுதலுக்கு சாட்சியாய் இருக்கிறது. சூரியனானது ஒரு குழந்தை பிறப்பதைப் போலவே காலையில் உதிக்கிறது. எட்டு அல்லது ஒன்பது மணிக்கு பள்ளியில் இருக்கிறது. பத்து மணிக்கு பள்ளியிலிருந்து வெளியேறுகிறது. பன்னிரெண்டு மணிக்கு நடுத்தர வயதை அடைகிறது. அதன் பின் அதுமரிக்கத் துவங்குகிறது. மரித்து அது மேற்கே அஸ்தமிக்கிறது, அதினுடைய கதை அவ்வளவு தானா? மீண்டுமாக அடுத்த நாள் காலை உதித்து ஜீவன், மரணம், அடக்கம் பண்ணுதல் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சி பகர்கிறது. தேவன் அவருடைய சிருஷ்டிப்பு எல்லாவற்றிலும் ஜீவிக்கிறார். அவர் காலங்களின் ஊடாய் அப்படியே செய்தார். 10இப்பொழுது தேவன் ஜீவிக்கிறாரா என்று அறிந்து கொள்வதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு. அவரை அவருடைய சிருஷ்டிப்பில் காண முடியும். ஆனால் தேவன் தம்மை மக்களுக்குக் காண்பித்தார் என்பதானது... சிலர் “நல்லது, நீங்கள் அவரைக் குறித்து அதிகமாகப் பேசுகிறீர்களே‚ அந்த தேவன் எங்கே இருக்கிறார்?” என்று கேட்கிறார்கள். ஆப்பிரிக்க ஊழியக் களத்தில் ஆப்பிக்கான்ஸ் என்ற மக்கள் மத்தியில் “ஆமோயா” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அதற்கு, காற்றைப் போன்று, “காணக்கூடாத வல்லமை” என்று அர்த்தம். அதைப் போலவே “உங்கள் தேவன், காற்றை போல காணக் கூடாத தேவன். அவர் வல்லமையுள்ளவர், ஆனால் நாம் அவரைக் காண முடியாது”, என்கிறார்கள். நல்லது, நாம் அவரைக் காண முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் யோவான் 12-ம் அதிகாரத்தில் இயேசுவைக் காண வந்த கிரேக்கர்களில் சிலர் “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கூறினபோது, சீஷர்களில் ஒருவரால் அவரிடம் அழைத்துச் செல்லப்பட்டதைக் காண்கிறோம். மற்றும் எபிரெயர் 13:8, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்” என்று கூறுகிறது. அன்று அவருடைய சீஷர்களில் ஒருவரால் இயேசுவைக் காணும்படி அழைத்து கொண்டுவரக் கூடுமானால், அவர் நேற்றும் இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கும் பட்சத்தில், அவருடைய சீஷர்களாகிய நாம் ஏன் அவரைத் தேடுகிறவர்களை இன்றிரவு அவருடைய பிரசன்னத்திற்கு அழைத்து வர முடியாது? வேதம் அவர் நேற்றும்,இன்றும், என்றும் மாறாதவர் என்று கூறுகிறதே. 11இது கேட்பதற்கு மூடத்தனமாக இருக்கும் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் எங்களோடு சற்று நேரம் பொறுத்துக் கொள்வீர்களானால், தேவனுடைய உதவியாலும் அவருடைய வார்த்தையோடும், அவருடைய வார்த்தையின்படியும் அவரை, என்னால் இங்கே உங்களுக்கு முன்பாகக் கொண்டு வர முடியும் என்று விசுவாசிக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஆறுதலாய் இருக்கிறது‚ அதற்காகத் தான் நாம் இங்கே இருக்கிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் ஆறுதலைத் தேடி வந்திருக்கிறோம். அதாவது தேவனுடைய பிரசன்னத்திற்குள் வரும்போது அவர் நம்மை மீண்டுமாக அந்த இலையைப் போல உயிர்ப்பித்து திரும்பக் கொண்டு வருவார் என்று அறிந்திருக்கிறோம். இது என்ன கற்பனைக் கதையா? அல்லது ஏதோ ஒரு சில வார்த்தைகளைக் கோர்வையாகச் சேர்த்திருப்பதா? அல்லது ஏதோ யூத கட்டுக்கதையா? அல்லது இது சத்தியமா? பிழை எங்கு அதிகமாய் இருக்கிறதோ, அங்கே சத்தியம் எங்கேயாவது ஓர் இடத்தில் இருந்தாக வேண்டும். கள்ளப் பணம் இருக்குமானால் அங்கே உண்மையான பணம் ஒன்று இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். நாம் இன்று பார்க்கிற பல காரியங்களைப் போலவே எங்கே அதிகமான பாவனையாளர்கள் இருக்கிறார்களோ, அங்கே உண்மையான தேவன் எங்கோ ஓர் இடத்தில் இருந்தாக வேண்டும். 12இப்பொழுது, நாம் அவருக்கு ஊழியம் செய்யவில்லை என்றால் நாம் செய்து கொண்டிருக்கிற எல்லாக் காரியத்தையும் விட்டுவிலகி அவருக்கு ஊழியம் செய்யக்கடவோம். ஏனென்றால் நாம் செய்து கொண்டிருக்கிற தொழிலில் நமக்கு ஒரு நன்மையும் இல்லையென்றால் அதினால் நமக்கு என்ன பலன்? மற்றும் நம்முடைய உத்தமம் நம்மை ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து தப்புவிக்காது. புறஜாதியினரும் உத்தமமாய் இருக்கிறார்களே. மக்கள் சில நேரங்களில் வேறு எதையோ குடிப்பதாக நினைத்துக் கொண்டு உத்தமமாய் கார்பாலிக் அமிலத்தைக் குடிக்கிறார்கள். உத்தமம் அதைச் செய்யாது. சரியான வழியும் தவறான வழியும் இருந்தாக வேண்டும். வேதாகமமே சரியென்று நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய வார்தையே சரியென்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது தேவன் நியாயம் தீர்க்கவேண்டும். (சகோ. பிரான்ஹாம் தொண்டையை சரி செய்து கொள்கிறார்) மன்னிக்கவும். அவர் உலகத்தை ஏதாவது ஒன்றைக் கொண்டு நியாயம் தீர்க்க வேண்டும். 13நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய மூதாதையர், அதாவது என் தாய் தகப்பனுக்கும் முன் இருந்தவர்கள், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்ததால் நானும் கத்தோலிக்க சபைக்குச் செல்வது ஓர் இயல்பான காரியமாக இருந்தது. ஆனால் என்னுடைய தகப்பனும் தாயும் சபைக்கு வெளியே திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் சபைக்கெல்லாம் போனதில்லை. எனக்கு தேவன் இருக்கிறார் என்று அறியும் வயது எனக்கு வந்த போது தேவன் எங்கேயோ இருக்கிறார் என்று அறிந்திருந்தேன். இதை அநேகர் என்னைப் பற்றிய புத்தகத்தில் வாசித்திருப்பீர்கள். இப்பொழுது காரியம் என்னவென்றால், தேவன் உலகத்தை ஒரு சபையைக் கொண்டு நியாயம் தீர்ப்பார் என்றால் அது எந்த சபையாக இருக்கும்? கத்தோலிக்க சபையின் மூலமாக என்றால் எந்த கத்தோலிக்க சபை? ரோமன் கத்தோலிக்க சபையா அல்லது ஆர்தடாக்ஸ் கத்தோலிக்க சபையா அல்லது எந்த சபையைக் கொண்டு அவர் நியாயம் தீர்ப்பார்? பிராடெஸ்டன்ட் சபையைக் கொண்டு நியாயம் தீர்ப்பார் என்றால் மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே, பிரெஸ்பிடேரியன் இவைகளில் எதைக் கொண்டு செய்வார்? பாருங்கள், அநேக விதமான குழப்பங்கள் இருக்கிறது. 14ஒருவன் அப்படியாக “நல்லது, நீ உத்தமமாய் இருக்கும் வரை அதெல்லாம் பரவாயில்லை” என்று சொல்லக் கூடும். வேதாகமத்தின் முதல் புத்தகத்தில் மரணம், வியாதி, துக்கம் மற்றும் பாவம் எல்லாம் வந்ததற்கு காரணம் என்னவென்றால் ஒரு நபர் ஒரு வார்த்தையை அவிசுவாசித்ததால் உண்டாயிற்று. அதே தேவன் தான் வேதாகமத்தின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தல்: 22-ல், “எவனாகிலும் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், அல்லது அதினோடு ஏதாவது சேர்த்தால், ஜீவ புத்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்,” என்று சொன்னார். ஆகவே அதுவே நியாயத் தீர்ப்பின் புத்தகமாக இருக்க வேண்டும். 15இப்பொழுது பரிசுத்த யோவான் 1-ஆம் அதிகாரத்தில் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார். நாம் அவரைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரே பேறானவராக இருந்தது. அது அந்த வார்த்தையே. அது தேவனே மாம்சமாகி நம்மிடத்தில் வாசம் செய்தார்… என்று இருப்பதைப் பார்க்கிறோம். எபிரெயர் 13:8 “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறுகிறது. அவர் மாறாதவராயிருக்கும் பட்சத்தில், அந்த வார்த்தையாய் இருக்க, அவர் எப்படி தன்னை காலங்களினூடாய் வெளிப்படுத்தினாரோ அதே விதமாகவே தன்னை அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுவாயிருக்க இன்றைக்கும் வெளிப்படுத்த வேண்டும். அது உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. அவரே வார்த்தை, மற்ற காலங்களில் எப்படி வார்த்தை அறிவிக்கப்பட்டதோ அப்படியே எல்லா காலங்களிலும் இருந்தாக வேண்டும். தேவன் தன்னை மாற்றிக் கொள்வதில்லை. மல்கியா 3:6-ல் அவர் மாறுவதில்லை “நான் கர்த்தர், நான் மாறாதவர்” என்று கூறுகிறது. 16ஆகவே அவர் ஆதியில் எப்படி இருந்தாரோ அதே வண்ணமாக இன்றும் இருக்கிறார். மனுகுலத்திற்கு அவர் ஆதியிலே வார்த்தையாக இருந்தார். தேவன் மனுக்குலத்திற்கு ஒரு சபையையோ அல்லது ஒரு கோட்பாட்டையோ சார்ந்திருக்கும்படி கொடுக்கவில்லை. அவர் மனுகுலத்திற்கு அவருடைய வார்த்தையை அரணாகக் கொடுத்தார். அதாவது “இந்த வார்த்தையை விசுவாசித்து ஜீவியுங்கள்” என்றார். இன்றைக்கும் அதே விதமாகத்தான் இருக்கிறது. மற்றும் கிறிஸ்துவே அந்த வார்த்தையாக இருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்”. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கும் பட்சத்தில் அவர் மற்ற காலங்களில் எப்படி இருந்தாரோ இன்றும் அதைப் போலவே இருந்தாக வேண்டும். நான் இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதையும் அவரே அந்த வார்த்தை என்பதையும் நன்றாக விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். 17இப்பொழுது “வேதவாக்கியம் தவறாததாயிருக்கிறது” என்று இயேசு சொன்னார். வேதவாக்கியங்கள் உண்மையே. யோவான் 1-ல் “அந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடத்தில் வாசம் செய்தது” என்று வேதவாக்கியம் கூறுகிறது. தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் மாம்சமாகி நம்மிடத்தில் வாசம் பண்ணினார். யோவான் 10:35-ல், எவரிடத்தில் இயேசு வந்தாரோ, அதாவது ஆதியிலே இருந்த வார்த்தையானது எவர்களிடத்தில் வந்ததோ அவர்களை தீர்க்கதரிசிகள் என்று இயேசு கூறினதைப் பார்க்கிறோம். இவ்விதமாக உங்களுடைய சொந்த நியாயப்பிரமாணமே உங்களுக்கு போதிக்கவில்லையா? என்றாலும் தேவனுடைய வார்த்தையானது எவர்களிடத்தில் வந்ததோ அவர்களை தீர்க்கதரிசிகள் என்றும், தேவனுடைய வார்த்தை அவர்களிடத்திலே வந்தது என்றும் இயேசு கூறினார். 18இப்பொழுது எபிரெயர் 1-ஆம் அதிகாரம் 'பூர்வகாலங்களில், அதாவது பண்டைய காலங்களில், பங்குபங்காகவும் வகைவகையாகவும், பிதாக்களுக்கு தீர்க்கதரிசிகள் மூலமாய் திருவுளம் பற்றின தேவன், இந்த கடைசி நாட்களில் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய்…' என்று கூறியிருக்கிறது. பார்த்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள், “வார்த்தை யாரிடத்தில் வந்ததோ அவர்களை தேவர்கள்” என்று தேவன்‚ இயேசு சொன்னார், அவர்களே தீர்க்கதரிசிகள். இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் சரீரம் எப்படியாக தேவனாக இருக்கவில்லையோ அதே விதமாகவே எந்த மனிதனும் தானாகவே தேவனல்ல. அவர் ஒரு மனிதன், அந்த திரைக்கு பின்னால் தேவன் இருந்தார். தேவன் எப்பொழுதும் தன்னை பொது மக்களிடமிருந்து மறைத்து, ஒரு திரையிட்டு அவரை விசுவாசிக்கிறவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று “திரை நீக்கப்பட்ட தேவன்” என்ற தலைப்பின் பேரில் கூடாரத்தில் (சபையில்) பிரசங்கம் செய்தேன். வெளியில் உள்ள உலக மக்கள் அவரைக் குறித்து ஒன்றும் அறியாதபடிக்கு தேவன் எப்பொழுதும் ஏதோ ஒன்றிற்கு பின்னால் தன்னை திரையிட்டுக் கொள்கிறார். ஆனால் அந்த திரைக்குப் பின்னால் பிரவேசிக்க சித்தமாயிருப்பவர்களுக்கும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்கிறவராய் இருக்கிறார். 19பழைய ஏற்பாட்டின் காலத்தில் தகசுத் தோலானது அவரை மறைத்துக் கொண்டது. அவர் ஷகினா மகிமைக்குள்ளாக இருந்தார். அது அந்த தகசுத் தோலுக்குப் பின்னால் இருந்தது. மக்கள் அந்த தகசுத் தோலுக்கு பின்பாக வருவதற்கு முன்... வார்த்தையானது தீர்க்கதரிசியாகிய மோசேக்குள் இருந்தது. அவன் மலையின் மேல் ஏறி அக்கினி ஸ்தம்பத்தை சந்தித்தான். அது அவனோடு பேசினது. பின்பு அவன் கீழே இறங்கி தீர்க்கதரிசியின் அடையாளங்களைச் செய்து இஸ்ரவேல் பிள்ளைகளை எகிப்திலிருந்து வெளியே அழைத்து இந்த மலைக்கு கொண்டு வந்தான். அதன் பிறகு தேவன் கீழே இறங்கி வந்து அந்த அக்கினி ஸ்தம்பத்திற்குள் சென்று அவரை திரையிட்டுக் கொண்டு மோசேயை அடையாளப்படுத்தினார். வேறு யாரும் அங்கு செல்ல முடியவில்லை. அதை எந்த மனிதனும் பாவனை செய்து முயற்சிக்க முடியாது. செய்யவே முடியவில்லை, அவர்கள் மரித்துப் போனார்கள். ஒரே ஒரு மனிதனை மாத்திரம் எடுத்துக் கொண்டார். அவன் அதற்குப் பின்பாக அந்த அக்கினி ஸ்தம்பத்திற்குள்ளாகச் சென்று, தேவனுடைய மகிமைக்குள்ளாக, ஷகினா மகிமைக்குள்ளாகச் சென்று, அந்த காலத்திற்கான வார்த்தையைக் கொண்டு வந்தபோது, அவனுடைய முகத்திற்கு திரையைப் போடுகிற அளவிற்கு தேவனுடைய மகிமை அவன் மேலாகப் பிரகாசித்தது. மக்களால் அவனை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. அது இயற்கையான மூடுதிரை. 20பார்த்தீர்களா? ஒரு மனிதன் அந்த திரையைக் கடந்து ஷகினா மகிமைக்குள்ளாக பிரவேசிக்கும் போது, உலகம் அவனை மதவெறியன் என்று அழைக்கும். ஏன் இப்படியிருக்கிறது என்று அவர்களால் புரிந்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் அதற்குள்ளாகச் செல்லும்போது அவனிடம் எந்த சௌந்தரியமும் இராது. அவனுடைய வார்த்தைகளைக் கூட அவன் சரியாக உச்சரிக்காமல் இருக்கக்கூடும், சரியாக உடை உடுத்தாமல் இருக்கக் கூடும், குருமார்கள் உடுத்துகிறபடியாக உடையை உடுத்தாமல் இருக்கக் கூடும். அவன் உடுத்த வேண்டிய விதம் என்று அவர்கள் நினைக்கிற விதானத்தில் உடுத்தாமல் இருக்கக்கூடும். இப்படியாக இருக்கலாம். ஆனால் அந்த தகசுத் தோலுக்குப் பின்னால், அந்த மனித தோலுக்குப் பின்னால், அந்த ஷகினா மகிமை இருக்கிறது. அங்கே வல்லமை இருக்கிறது, அங்கே வார்த்தை இருக்கிறது, அங்கே தான் சமூகத்து அப்பம் இருக்கிறது. ஒளியாயிருக்கிற அந்த ஷகினா மகிமையே அங்கிருக்கிற தானியத்தை முதிர்சி அடையச் செய்கிறது. கான்சாஸ் மக்களாகிய நீங்கள் உங்கள் கோதுமை தானியத்தைக் கொண்டு அறிந்திருக்கிறீர்கள். அந்த சூரியன் இல்லாமல் வெளிச்சம் உண்டாகாது. 21உங்களுடைய பழைய தோலாகிய பழைய எண்ணங்கள், பழைய கோட்பாடுகளை விட்டொழித்து அந்த தகசுத் தோலிற்கு பின்னால் இருக்கும் தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக வருவீர்களானால் தேவனுடைய வார்த்தையானது ஜீவிக்கிற ஒன்றாக, தத்ரூபமாக மாறிவிடும். அப்பொழுது நீங்கள் ஷகினா மகிமையினால் விழித்தெழும்புவீர்கள், அப்பொழுது வேதாகமமானது ஒரு புதிய புத்தகமாக மாறும். அப்பொழுது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பார். நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் ஜீவிக்கிறவர்களாய் அந்த நாட்களில் விசுவாசிகளுக்கு, ஆசாரியர்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட சமூகத்தப்பங்களைப் புசித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாமோ “ஆசாரியர்களும், ராஜரீக ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், விசேஷித்த ஜனமாயும் தேவனுக்கு ஆவிக்குரிய பலியை செலுத்துகிறவர்களாகவும் இருக்கிறோம்”. ஆனால் நீங்கள் திரை நீக்கப்பட்ட தேவனை காணுவதற்கு அந்த திரைக்கு பின்னால் வரவேண்டும். தேவன் திரை நீக்கப்பட்டிருக்கிறார். அதுவே பிரத்தியட்சமான வார்த்தையாய் இருக்கிறது. 22இன்று அநேகர் எழும்பி, “நாங்கள், இன்னார் இன்னார், நாங்கள் இந்த வழியில் விசுவாசிக்கிறோம்”, என்றும், மற்றொரு கூட்டத்தார், “நாங்கள், இன்னார் இன்னார், நாங்கள் இந்த வழியில் விசுவாசிக்கிறோம்” என்றும் கூறுகின்றனர். பாருங்கள், நீங்கள் அநேக வியாக்கியானங்களைப் பெறுகிறீர்கள். தேவனுக்கு எந்த வியாக்கியானியும் தேவை இல்லை. அவரே தன்னுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் செய்கிறார். “அது ஒரு தனிப்பட்ட வியாக்கியானம் அல்ல” என்று வேதம் கூறுகிறது. தேவன் தன்னைத் தானே வெளிப்படுத்திக் காட்டுகிறார். அவர் அவ்விதம் செய்கிறார். அவர் ஆதியிலே “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்று சொன்ன போது அங்கே வெளிச்சம் உண்டானது. அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. பின்பு தேவன் “ஒரு கன்னிகை கர்பவதியாவாள்” என்று சொன்னார், அவள் கர்ப்பம் தரித்தாள். அதற்கும் எந்த வியாக்கியானமும் தேவையில்லை. கடைசி நாட்களில் “மாம்சமான யாவர் மேலும், என் ஆவியை ஊற்றுவேன்” என்று சொன்னார், அவர் சொன்னபடியே செய்தார். அதற்கும் எந்த வியாக்கியானமும் தேவையில்லை. 23அது இன்னும் வார்த்தையாகவே இருக்கிறது. வார்த்தை தேவனாய் இருக்கிறது. ஒவ்வொரு காலத்திற்கும் தேவன் அவருடைய வார்த்தையின் பாகத்தை வைத்து இருக்கிறார். அதன் பிறகு அவர் என்ன செய்தார் என்று பாருங்கள். ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். “கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசியினிடத்திற்கு வருகிறது”. அதை தீர்க்கதரிசியானவர் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். அதை மக்கள் விசுவாசித்தனர். அதுவே தேவன் செயலில் இருக்கிறார் என்றும் தன்னுடைய ஆவியினால் அசைவாடுகிறார் என்பதும் ஆகும். 24இப்பொழுது, அவர் வேதவாக்கியத்தை நிறைவேற்றும்படியாக தம்மைத் தாமே ஒரு மனுஷ குமாரனாக அடையாளப்படுத்திக் கொண்டதைப் பார்க்கிறோம். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவர் பூமிக்கு வந்தபோது வெளியே உள்ள பொது மக்களுக்கு முன்பாக எப்படி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் என்றால், மனுஷ குமாரனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் மூன்று குமாரரின் பெயரில் வந்தார். மனுஷ குமாரன், தேவ குமாரன், மற்றும் தாவீதின் குமாரன். இப்பொழுது மனுஷ குமாரன் என்று சொல்லும் போது அது ஒரு தீர்க்கதரிசி. இன்னும் யேகோவா எசேக்கியேலை அழைத்த போது அவனை “மனுஷகுமாரனே” என அழைத்தார். தீர்க்கதரிசியாகிய மனிதனை யேகோவா அழைத்த போது அவனை மனுஷ குமாரனே என அழைத்தார். மற்றும் இயேசுவும் தன்னை மனுஷ குமாரனாக அடையாளப்படுத்திக் கொண்டார், ஏனென்றால் வேதவாக்கியம் உடைக்கப்பட முடியாது. உபாகமம் 18:15-ல் மோசே இவ்விதமாக... இஸ்ரவேல் மக்கள் மோசேயை நோக்கி “நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம் தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக” என்றனர். (யாத். 20:19) அதற்கு (கர்த்தர்) அவர், “நான் இனி அவர்களிடம் ஒருபோதும் அவ்விதமாக பேசப் போவதில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன்” என்றார். உபாகமம் 18:15-ல், “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே எழும்பப் பண்ணுவார்” என்று சொன்னார். ஆகவே அந்த வேதவாக்கியம் உடைக்கப்பட முடியாது. அவர் மனுஷகுமாரனாக வந்தாக வேண்டும். அவர் பூமியின் மேல் வந்தபோது அவருக்குரிய காலமாக அது இருந்தது. 25அதன் பிறகு அவர் மரித்து, உயிர்த்தெழுந்து, பரத்திற்கு ஏறிச் சென்று பரிசுத்த ஆவியை அனுப்பினார் அதுவே தேவகுமாரன். தேவன் ஆவியாய் இருக்கிறார். சபை காலம் முழுவதிலும் அவர் தேவகுமாரனாகவே இருந்து வருகிறார். அதன் பிறகு ஆயிரவருட அரசாட்சியில் அவர் தாவீதின் குமாரனாக சிங்காசனத்தில் அமர்ந்து அரசாளுவார். அவரே மேலே ஏறிச் சென்றவர், “நான் ஜெயங்கொண்டு என் பிதாவின் சிங்காசனத்தில் உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு கூட உட்காரும்படி அருள் செய்வேன்”. இப்பொழுது அவர் பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால் ஆயிர வருட அரசாட்சியில் அவர் தன்னுடைய சொந்த சிங்காசனத்தில் உட்காருவார், ஏனென்றால் அவரே தாவீதின் குமாரன். அவரே மனுஷகுமாரனும்,தேவ குமாரனும், தாவீதின் குமாரனுமாய் இருக்கிறார். பாருங்கள், இவை பரிபூரணமாய் இருக்கிறது. 26இப்பொழுது அவர் தீர்க்கதரிசியாக வர வேண்டியதாய் இருந்தது என்று பார்க்கிறோம். அவருடைய மாறாத வார்த்தை‚ தேவன் ஒருபோதும் மாறுவதில்லை. தேவன் மாறுவதில்லை, அவர் யோசேப்பிற்குள் தீர்க்கதரிசியாய் இருந்தார். அவரே தீர்க்கதரிசியாகவும் யோசேப்பிற்குள் தேவனாகவுமிருந்தார். அவர் தாவீதிற்குள்ளும் தேவனாயிருந்தார். 27யோசேப்பை கவனித்துப் பாருங்கள். அவன் ஏறக்குறைய பரிபூரணமாக கிறிஸ்துவின் வாழ்க்கையை சித்தரித்தான். ஆனால் அவன் “அவர்” அல்ல என்று காட்டும்படி ஒரு தவறு செய்தான். மனிதன் தவறு செய்வான். பாருங்கள். அவனுடைய தகப்பனாகிய யாக்கோபுவினிடத்தில், அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தார். அவரை பார்வோனிடம் கொண்டு சென்றபோது இப்படியாய் “நாங்கள் எல்லோரும் கால் நடைகளின் உரிமையாளர்கள்” என கூறுங்கள் என்றான். ஏனென்றால் மேய்ப்பர்கள் என்றாலே எகிப்தியர்களுக்கு அருவருப்பானவர்கள். ஆனால் ஆவியானவரோ அவனுடைய தகப்பனார் அந்த விதமாய் சொல்லும்படி அனுமதிக்கவில்லை. யாக்கோபோ “உங்களுடைய அடியார்களாகிய நாங்கள் மேய்ப்பர்கள்” என்று சொன்னான். ஆகவே யோசேப்பு அந்த இடத்தில் ஒரு தவறு செய்ததைப் பார்க்கிறோம். மிகப் பெரிய மனிதனாகிய தாவீதும் தவறு செய்தான். தேவனுடைய இருதயத்திற்கு அடுத்த தாசனாய் இருந்தவன் பத்சேபாளை எடுத்து, தன் வாழ் நாள் முழுவதும் ஊழியம் செய்த தேவனுக்கே அதை மறைத்து விடலாம் என எண்ணினான். ஆனால் தீர்க்கதரிசியான நாத்தானைக் கொண்டு தேவன் அவனுடைய காரியங்களை வெளியரங்கமாக்கினார். பாருங்கள்? 28ஆனால் தாவீதை கவனியுங்கள். அவன் தன்னுடைய சொந்த மக்களாலே வெளியே துரத்தப்பட்டு ஒரு புறக்கணிக்கப்பட்ட ராஜாவாய் வெளியே சென்றான். அவனுடைய சொந்த குமாரத்தியேfஅவளுடைய சகோதரனாலே கெடுக்கப்பட்டு, மற்ற சகோதரர்கள் அவனைக் கொன்று போட்டார்கள். மற்றும் அப்சலோம் எழும்பி, ராணுவத்தைப் பிரித்து ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி அவனுடைய சொந்த தகப்பனாகிய தாவீதையே ஒதுக்கி, வெளியே துரத்தி, தன் மக்களால் தாவீது புறக்கணிக்கப்படும்படி செய்தான். அவன் நகரத்திலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தபோது முடவனைப் போன்று ஒருவன் தன் காலை இழுத்துக் கொண்டு தாவீது அண்டை வந்து அவனை கேலி செய்து அவன் மேல் துப்பினான். அப்பொழுது அவனுடைய பாதுகாவலன் தன்னுடைய பட்டயத்தை எடுத்து, “என்னுடைய ராஜாவின் மேலே துப்பின அந்த நாயின் தலை இன்னும் அவன் உடம்பில் இருப்பதா?” என்றான். அதற்கு தாவீது, “அவனை விட்டுவிடு. அவன் அப்படி செய்யும்படி கர்த்தர் அவனுக்குச் சொல்லியிருக்கிறார்” என்றான். அந்நேரத்தில் தாவீது தான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அறியாமல் இருந்ததில் எந்த சந்தேகமுமில்லை. அவன் ஒலிவமலைக்கு மேல் சென்று அங்கிருந்து ஒரு புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக கீழே நோக்கிப் பார்த்து அழுதான். அங்கே சில நூற்றாண்டுகள் கழித்து தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அதே மலை மீது ஒரு புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக அழுதார். அவர் மேலும் துப்பினார்கள். 29பார்த்தீர்களா? இவை எல்லாமே கிறிஸ்துவை சித்தரித்தது. அவர் அவைகளில் ஒருபாகமாக தன்னை வெளிப்படுத்தினார். தேவன் ஒருபோதும் மாறுவதில்லை. அவருடைய தன்மை மாறுவதில்லை. அவருடைய குணங்கள் ஒருபோதும் மாறுவதில்லை. அவர் இன்னும் வார்த்தையாயிருக்கிறார். மல்கியா 3-ஆம் அதிகாரம் 6-ம் வசனம் அதை நிரூபிக்கிறது. பாருங்கள், ஒவ்வொரு காலத்திற்கும் தன்னுடைய ரூபத்தை மாத்திரமே மாற்றுகிறார். ஒவ்வொரு காலத்திற்கும் அந்தந்த நாட்களுக்கென தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்ட தன்னுடைய வார்த்தையின் பாகத்தை வைத்திருக்கிறார். நல்லது, அந்த குறிப்பிட்ட காலம் வரும்போது, தேவன் வேறொரு ரூபத்தை எடுத்துக் கொண்டு செயல்படுகிறார். பாருங்கள், அது எப்பொழுதும்; தேவனாகவே இருக்கிறது. அவர் வார்த்தையாகவே இருக்கிறார், “வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்” என்கிறபடியாகவே இருக்கிறார். 30இப்பொழுது எபிரெயர் 4-ஆம் அதிகாரம்,12-ல் கூறியபடி இயேசுவானவர், அவர் செய்த கிரியையின் மூலமாக, எப்படியென்றால் எபிரெயர் 4: 12, “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று கூறினபடி அடையாளங் கண்டு கொள்ளப்பட்டார். அப்படியாகவே ஆபிரகாமும் கூட தூசி படிந்த வஸ்திரத்தோடு இருந்த இந்த மனிதனை சந்தித்தபோது அவரை தனியாக வரும்படி அழைத்ததைப் பார்க்கிறோம். மற்ற இரண்டு பேரும் சோதோமிற்குச் சென்று சோதோமிலிருக்கிறவர்களை வெளியே அழைத்ததைப் பார்க்கிறோம். அது நம்முடைய நாட்களில் இருக்கிற நவீன கால பில்லிகிரஹாமிற்கு ஒத்ததாய் ஓர் அழகான காட்சியாய் இருக்கிறது. 31ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட சபையாகிய உண்மையான வித்தாகிய ஆபிரகாமை பாருங்கள். அவனோடு பேசின அந்த மனிதன் ஒருபோதும் அவனுடைய உடன் பிறப்பின் மகனாகிய லோத்துவினிடத்தில் செல்லவில்லை. அவர் ஆபிரகாமோடு பேசினார். அவர் ஆபிரகாமோடு பேசினபோது அவனை “ஆபிரகாம்” என்று அழைத்தார். நினைவில் கொள்ளுங்கள், சில நாட்களுக்கு முன்பு அவனுடைய பெயர் ஆபிராம் என்றும் அவனுடைய மனைவியின் பெயர் “சாராய்”என்றும் அழைக்கப்பட்டிருந்தது, சாராள் அல்ல. அவர், “ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “அவள் உமக்கு பின்னால் இருக்கிற கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். “ஒரு உற்பவகால திட்டத்தில் உன்னை சந்திக்கப்போகிறேன்” என்று சொன்னார். அப்போது சாராளோ தன்னுடைய உள்ளத்தில் ஒரு விதமாய் அதைக் குறித்து நகைத்தாள். பின்பு அந்த மனிதருக்குப் பின்னாக கூடாரம் இருக்க, “ஏன் சாராள் நகைத்தாள்?” என்று கேட்டார். “கூடாரம் அவருக்குப் பின்னாக இருந்தது” என்று வேதம் சொல்லுகிறது. மற்றும் ஆபிரகாம் அந்த மனிதரை “ஏலோகிம்” என்று அழைத்தார். ஏலோகிம் என்றால் “தன்னில் தானே ஜீவிக்கிறவர்” என்று அர்த்தமாகும். 32இப்பொழுது ஆங்கிலத்தில் “தேவன்” (god) என்ற வார்த்தைக்கு எதையும் பொருத்தலாம். இந்த ஆங்கில வார்த்தைகளை எல்லாம் நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இவை ஒரு விதமான மாறுபாடுள்ள எண்ணங்களைக் கொண்டு இருக்கிறது. இந்த ஆங்கில வார்த்தையான ஒரு தேவன் என்ற சொல்லுக்கு, இந்த மேசையையும் தேவனாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு மரத்தை தேவனாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு மனிதனை தேவனாக எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் தேவன் என்கிற வார்த்தைக்கு எதை வேண்டுமானாலும் தேவனாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஏலோகிம் என்றால் “தன்னில் தானே ஜீவிக்கிறவர்” என்று அர்த்தமாகும். இந்த மேசையானது தானாக உருவாகவில்லை. மனிதன் தன்னில் தானே ஜீவிக்கவில்லை. இந்த மரம் தானாக ஜீவிக்கவில்லை. ஆனால் ஏலோஹிம் என்றால் “தன்னில் தானே ஜீவிக்கிறவர்”. அவர் மாம்சத்தில் வெளிப்பட்டவராய் அங்கே நின்று கொண்டு, பசுவின் பாலைக் குடித்தவராய், கன்றுக் குட்டியின் மாம்சத்தை புசித்தவராய், அப்பத்தை புசித்தவராய் ஆபிரகாமோடு பேசினார். ஆபிரகாம் அவரை “ஏலோஹிம்” என்று அழைத்தான். 33மற்றும் இயேசுவானவர் பரிசுத்த லூக்கா 17-ஆம் அதிகாரத்தில் “சோதோமின் நாட்களில் நடந்தது போல் மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களில் திரும்பவும் நடக்கும்” என்றார். இப்பொழுது தேவகுமாரனாக அல்ல, மனுஷ குமாரனாக வெளிப்படும் போது என்றார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு சற்று முன்பாக மனுஷகுமாரன் வெளிப்பட்டு தன்னுடைய சபைக்கு தன்னை வெளிப்படுத்துவார். ஆபிரகாம் தேவனை ஒளியில் மற்றும் தரிசனங்களில் என்று பல விதத்தில் அவரை பார்த்திருக்கிறான். ஆனால் இங்கே காத்திருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பாக, தேவன் ஒரு மனிதனாக வந்தார். அவ்விதமாகவே தான் இயேசுவும் கூறியுள்ளார். “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் மறுபடியும் திரும்ப வருவதற்கு முன்பாக, ஏலோஹிம் தாமே (அவருடைய வார்த்தை) மாம்சத்தில் பிரத்தியட்சமாவார்” என்று சொன்னார். அது தேவனே. “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காணவிரும்புகிறோம்‚” 34எல்லா காலத்திலேயும் தேவன் இவ்விதமாகவே வெளிப்பட்டார். அவர் எப்பொழுதும் மனித மாம்சத்திற்கு பின்னாக தன்னை மறைத்துக் கொள்கிறார். அது தேவன் உனக்குள்ளாக இருப்பதாகும்‚ இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உங்களோடு கூட இருப்பேன் என்றார். அவர் நமக்குள்ளாகவும் இருக்கிறார். மற்றும் பரலோகத்திலிருந்து வரும் ரூபத்தில் அவர் வெளிப்படும் மட்டும் நம்மோடு முடிவு பரியந்தமும் இருப்பார். 35இந்த காலத்திற்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தை என்ன? வேதாகமத்தில் தேவன் இந்த காலத்திற்கென்று எதை வாக்குத்தத்தம் பண்ணினாரோ அது ஜீவிக்கிறதை நீங்கள் காணும் பட்சத்தில், அதை யார் சரி என்று சொன்னாலும் அல்லது யார் தவறு என்று சொன்னாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. அது சரியே, ஏனென்றால் தேவனே அவருடைய வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார். “நல்லது அந்த நாட்களெல்லாம் கடந்து போயிற்று, தெய்வீக சுகமளித்தல் எல்லாம் இல்லை. அவை எல்லாம் மதவெறியாட்டம்” என்று யாரும் அவருக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அது தவறு என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தேவன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவைகளை செய்வேன் என்று சொல்வாரானால் அதைச் செய்வார். ஆனால்காரியம் என்னவென்றால்,நாம் அந்த பழைய பாரம்பரியத்தில் கற்றுக் கொண்டவைகளை எல்லாம் பிடித்துக் கொண்டு இவைகளைத் தவற விடுகிறோம். அந்த காரணத்தினால் தான் அவர்கள் இயேசு வந்திருந்த போது அவரைத் தவறவிட்டார்கள். அவர் சரியாக அங்கே இருப்பார் என்று வேதம் தெளிவாக சொன்ன போதிலும் கூட அவர்கள் நியாயப்பிரமாணத்திலே ஜீவிக்க முயற்சித்தார்கள். அவர் பேசின அந்த வசனத்தை வாசிக்கட்டும். 'வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. வேதவாக்கியங்கள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கவில்லை என்றால், அது தவறாக இருக்கிறது“ என்றார். அந்த கன்னிகை கர்ப்பவதி ஆனதை நிச்சயமாகவே கண்டிருக்கக்கூடும்‚ அவரே வேத வாக்கியங்களுக்கெல்லாம் பூரண பதிலாக இருந்தார் என்று அறிந்திருக்கக்கூடும்‚ கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று அதை விசுவாசிக்கிறோம். 36ஆனால் நோவாவின் நாளுக்கான செய்தியோடு மோசே வந்திருந்தால் அவனுக்கு என்ன பிரயோஜனம்? மோசேயின் செய்தியோடு யோவான்ஸ்நானகன் வந்திருந்தால் அவனுக்கு என்ன பிரயோஜனம்? பாருங்கள்‚ நாம் சான்கியின் செய்தியைப் பெற்றிருக்கவில்லை. நாம் மூடியின் செய்தியைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் நாமோ இந்த மணி வேளையின் செய்தியைப் பெற்றிருக்கிறோம். லூத்தரின் செய்தி அல்லது வெஸ்லியின் செய்தியை பெற்றிருக்கவில்லை. அவர்கள் எல்லோரும் சரியானவர்களே. ஆனால் இது வேறு ஒரு நாள், இது வேறொரு வாக்குத்தத்தம். இது வேறொரு சபைக் காலம். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”. ஆனால் மக்கள் எவ்வளவு குருடர்களாய் இருக்கிறார்கள். அது எவ்வளவு திகைப்படையச் செய்கிறது. ஏனென்றால் அது அந்த விதமாகத்தான் இருந்தாக வேண்டும். வேதமானது இந்த லவோதேக்கியா சபை காலத்தில் மக்கள் “வெது வெதுப்பானவர்களாய்” இருப்பார்கள் என்றும் “அவர்களை வாந்திப் பண்ணிப்போடுவேன்” என்றும் வேதம் உரைக்கிறது. “ஆனால் அவர் எவர்களை நேசிக்கிறாரோ அவர்களை கடிந்து கொள்கிறார், அவர்களை சிட்சிக்கிறார்”. இந்த லவோதேக்கியா சபை காலத்தில் இவ்விதமாகத் தான் இருக்கும் என கூறியிருக்கிறார். 37நினைவில் கொள்ளுங்கள்,தேவன் தன்னுடைய ரூபத்தையே மாற்றுகிறார். “என் மார்ஃபே” (En morphe) என்கின்ற கிரேக்க வார்த்தைக்கு “வெவ்வேறு முகமூடியை அணிகிறவர்” என்று அர்த்தமாகும். கார்மென் அல்லது ஷேக்ஸ்பியர் நாடகங்களில் அது போன்று காரியத்தைப் பார்க்கலாம். அவர் ஒரு நடிகனை போல் தன் ரூபத்தை மாற்றுகிறார். இதுவரை இருந்த தீர்க்கதரிசிகள் என்னவாக இருந்தார்களோ அதெல்லாம் தேவனே தீர்க்கதரிசிகளுக்குள்ளாக இருந்ததாகும். யாருக்கு தேவனுடைய வார்த்தை வந்ததோ அவர்களை தேவர்கள் என்று அழைக்க, இதோ தேவனுடைய குமாரனாகிய என்னை நீங்கள் எப்படி குற்றப்படுத்துகிறீர்கள்? என்று இயேசு சொன்னார். ஓ என்னே‚ இன்றைக்கும் அதே காரியம் தான். இது தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டதாய், இந்த மணி வேளையின் செய்தியாய், இந்த நாளின் வெளிச்சமாய் இருக்கிறது. நாம் முன்பு இருந்த மற்ற செய்திகளை எல்லாம் கொண்டு இருக்க முடியாது. அவைகள் எல்லாம் ஏற்கனவே ஜீவித்து முடிந்தாயிற்று. நாமோ கண் கூசும் வெளிச்சத்தின் நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 38இந்த காலம் தான் இருந்தவைகளிலேயே மிகுதியாகப் பறிகொடுத்த, மிகுந்த கொள்ளையின் காலம். இது வரை தேசம் காணாத மிகப்பெரிய கொள்ளையானது சமீபநாட்களில் இங்கிலாந்து தேசத்தில் நடந்தது. அது தவறான வெளிச்சத்தினால் உண்டானது. வரலாற்றில் இதுவரை ரயில் கொள்ளையில் எழுபது லட்சம் டாலர் திருட்டு போனதேயில்லை. இது மிகப் பெரிய கொள்ளையாகும், இந்த உலகத்தின் விரோதிக்கிறவர்களின் காலத்திற்கு இது அடையாளமாக இருக்கிறது. இந்த உலகத்தில் இதுவரை இருந்ததில் மிக பெரிய விரோதிகளின் அடையாளமுடைய காலம் இருக்குமானால் அது நாம் ஜீவிக்கிறதான இந்த மணிவேளையில் இருக்கும் கள்ள வெளிச்சமே. இது நம்மை மனித கோட்பாடுகளையும் மற்றும் அது போன்று காரியங்களையும் சார்ந்திருக்கும் படி செய்கிறது. நாம் ஜீவிக்கிற நிரூபங்களாய் இருக்கவேண்டியவர்களான நேரத்தில், இன்னொரு விதத்தில் சொல்லுவோமானால் நாமே இந்த நேரத்திற்கென்று கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமாகிய எழுதப்பட்ட ஜீவிக்கின்ற நிரூபங்களாய், தேவனுடைய வார்த்தையை ஜீவிக்கச் செய்கிறவர்களாய், வார்த்தையின் பிரத்தியட்சமாக இருக்கிறோம். அப்படித்தான் அப்போஸ்தலர்களும் இருந்தார்கள். 39அப்படியே யோவான் ஸ்நானகனும் ஜீவித்தான். அவனே அந்த வனாந்திரத்திலிருந்து கூப்பிடுகிற சத்தம் என்று அவர்களுக்குச் சொல்ல முயற்சித்தான். “இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்” என்று மல்கியா: 3-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டவைகள் அவனே என்று சொல்ல முயற்சித்தான். அவனே அந்த ஜீவிக்கின்ற வார்த்தையாய் இருந்தான். மற்றும் உண்மையாய் மறுபடியும் பிறந்த சபை இந்த மணி வேளையில் ஜீவிக்கின்ற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. அதுவே இக்காலத்திற்குரிய பிரத்தியட்சப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறது. இந்த காலத்தில் எப்படியாக இருக்கும் என்று வேதவாக்கியங்களில் ஆராய்ந்து பாருங்கள். அது கிறிஸ்து மறுபடியும் ஜீவிக்கிறதாய் இருக்கிறது. அவர் தன்னுடைய முகத்திரையை மாத்திரம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுகிறார். 40அவர் ஒரு மேசியா என்று முற்றிலுமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அவர்கள் அவரை அறிந்திருக்க வேண்டும். மேசியா எப்படியாக இருக்க வேண்டும் என்று நாம் அறிவோம். அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். அவர் அப்படித்தான் இருப்பார் என்று வேதம் கூறினது. அவரும் அதைத் தான் கூறினார். நான் மனுஷ குமாரனாக இருக்க “மனுஷ குமாரனாகிய என்னை நீங்கள் யார் என்று கூறுகிறீர்கள்?” என்றார். அவர் எப்பொழுதும் தீர்க்கதரிசியின் காலத்தில் தேவனுடைய தீர்க்கதரிசியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அந்த விதமாகத்தான் அவர் இருந்தார். ஆனால் அவரோ தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவர். அவர் தேவன் - தீர்க்கதரிசி. தாவீதுக்குள்ளாக என்ன இருந்ததோ, மோசேக்குள்ளாக என்ன இருந்ததோ, எலியாவிற்குள்ளாக என்ன இருந்ததோ, அவை எல்லாமுமாக,“தேவத்தத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது”. அவர் தேவன்-தீர்க்கதரிசியானவர். அவர் தேவனே, யோகோவாவே தனக்கென்று ஒரு கூடாரத்தை உண்டுபண்ணி தன்னுடைய சொந்த குமாரனில் மாம்சமாகி வெளிப்பட்டார். மற்ற எல்லோரும் தவறினார்கள். அவர்களிடத்தில் பிழை இருந்தது. ஆனால் அவரிடத்தில் ஒருபிழையும் இல்லை. இன்னுமாக “இவர் என்னுடைய நேசக் குமாரன் இவரில் வாசம்பண்ண நான் பிரியமாயிருக்கிறேன்” என்று தேவனே சொன்னார். அது சரிதான். அவரில் எந்த பிழையும் இல்லை. “அவருக்குச் செவி கொடுங்கள்‚” என்றார். அவரே பிரத்தியட்சமான தேவனாக இருந்தார். அவர்கள் அவரை “நீ உன்னை தேவனாக அல்லது தேவனுக்கு சமமாக ஆக்கிக் கொள்கிறாயே” என்றார்கள். அவர் தேவன் தான்‚ ஏனென்றால் அவர் அவருடைய சொந்த குமாரன். ஆமென். அவரே தேவனுடைய பிரத்தியட்சமாக இருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து உலகத்தை தம்மிடத்திற்கு ஒப்புரவாக்கினார். 41மேலும் இந்த கடைசி நாட்களில் தன்னுடைய குமாரன் கிறிஸ்து இயேசுவின் மூலமாக மக்களுக்கு தன்னை தெரியப்படுத்தி திருவுளம் பற்றுகிறார். அப்படியென்றால் கிறிஸ்து என்றால் என்ன?வார்த்தையே!. வார்த்தை என்று சொல்லும்போது, மோசேயின் வார்த்தையா? ஆம், ஆனால் இன்று அவர் இந்த நாளுக்கென பிரதியட்சமான வார்த்தையாய் இருக்கிறார். 42இப்பொழுது இயேசு எவ்விதமாக இருந்தார் என கவனியுங்கள். அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். அவர் மேசியாவின் அடையாளத்தை கொண்டிருந்தாரா என்று பார்ப்போம். நாம் முடிப்பதற்கு முன்பாக அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிடம் பரிசுத்த யோவான்: 1-ஆம் அதிகாரத்தைப் பார்க்கலாம். அவர் பூமியில் வருகிறதை யோவான் 1-ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அவர் வேதம் கூறின படியாக ஒரு கன்னியினிடத்தில் பிறந்தார். அவர் ஒரு கன்னியின் கர்ப்பத்தில் உற்பத்தியானார். இப்பொழுது கன்னியானவள் ஒரு தேவதை அல்ல. அப்படியென்றால் மரியாளைக் குறித்து என்ன என்று நீங்கள் கேட்கலாம். அவள் குறைபாடுள்ள ஸ்திரீ. அவள் மற்ற ஸ்திரீகளைப் போன்று அவளும் ஒரு ஸ்திரீ. தேவதை அல்ல. அவள் ஒரு ஸ்திரீ. யாரோ ஒருவர் என்னிடத்தில் நீங்கள் அப்படிச் சொல்லுவதற்காக வெட்கப்படவில்லையா? என்று கேட்டார். அதற்கு இல்லை ஐயா என்றேன். இங்கே கவனியுங்கள். அவள் எங்கே தவறு செய்தாள்? அவள் இங்கு ஒரு தவறைச் செய்திருக்கிறாள். அவர்கள் பெந்தெகொஸ்தே பண்டிகைக்குச் சென்றார்கள். மக்கள் மூன்று நாட்கள் பிரயாணம் செய்தார்கள். அவருடைய பெற்றோர்கள் அவரைத் தவறவிட்டார்கள். ஆகவே அவரைத் தேடிச் சென்றார்கள். அப்பொழுது அவர் தேவாலயத்தில் ஆசாரியர்களோடு வேதவாக்கியங்களைக் கொண்டு விவாதித்துக் கொண்டிருந்தார். சரியாக அங்கே அந்த ஆசாரியர்களுக்கு முன்பாக அந்த குறை கூறுகிறவர்களுக்கு முன்பாக மரியாள் என்ன சொன்னாள் என்று பாருங்கள். “உன் தகப்பனும் நானும் கண்ணீரோடு உன்னைத் தேடினோம்” என்றாள். 43ஆனால் வார்த்தையானது எப்பொழுதும் தவறை சரி படுத்துகிறதாயிருக்கிறது. அவரே அந்த வார்த்தை. பன்னிரண்டு வயதுடைய சிறுவனாய் அவர் இருந்தார். எங்கிருந்து அவருக்கு இந்த ஞானம் வந்தது? நினைவில் கொள்ளுங்கள், அவள் சரியாக அங்கேயே அவளுடைய சாட்சியை மறுதலித்தாள். தேவனே அவருடைய தகப்பனாய் இருந்தார். ஆனால் அவளோ, “நானும், உன் தகப்பனாகிய யோசேப்பும் கண்ணீரோடு உன்னைத் தேடினோம்” என்று சொன்னாள். அதற்கு அவர், “நான் என் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்க வேண்டியதென்று நீங்கள் அறியீர்களா?” என்றார். பார்த்தீர்களா? யோசேப்பு அவருடைய தகப்பனாக இருப்பார் என்றால், அவர் யோசேப்பின் வேலையாகிய நிலைப் பெட்டிகள், கதவுகள் மற்றும் அதுபோன்று மற்றவைகளைச் செய்து கொண்டிருக்கவேண்டும். பாருங்கள்? அவரோ நான் என்னுடைய பிதாவின் வேலையாய் இருக்கிறேன் என்று சொல்லி அந்த நாளுக்கென கொடுக்கப்பட்ட வார்த்தையை நிலைவரப்படுத்திக் கொண்டிருந்தார். அவரே அந்த வார்த்தை, ஆமென். பாருங்கள். மரியாள் தவறு செய்தாள். ஆனால் அவரோ ஒரு தவறும் செய்ததில்லை. அவரோ பரிபூரணமானவராய் இருந்தார். 44கவனியுங்கள், அவர் பிறந்து, வளர்ந்து யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பிறகு பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் வந்து, வனாந்திரத்திலிருந்து திரும்பிய பிறகு அவருடைய சுகமளிக்கும் ஊழியம் துவங்கப்பட்டது. ஒரு சமயம் சீமோன் எனப்பட்ட ஒருவன் அவனுடைய சகோதரன் அந்திரேயாவோடு ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தான். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். நாம் முடிக்கப் போகிறோம். அந்நேரம் அவர் எப்படி இருந்தார் என்று பார்க்கலாம். “அவர் பிதாக்களுக்கு தீர்க்கதரிசியின் மூலம் திருவுளம்பற்றி இந்த கடைசி நாட்களில் தன்னுடைய குமாரன் மூலமாக திருவுளம்பற்றுகிறார்” என்று இருக்கும் பட்சத்தில் இன்றைக்கு அவர் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்?. அவர் அதே விதமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாரா என்று பாருங்கள்?. 45அவர் எப்படி தன்னை அடையாளப்படுத்தி கொண்டார்? அவர், “நான் இந்த பள்ளியில் படித்தேன். நான் என்னுடைய இளநிலை பட்டத்தை பெற்றிருக்கிறேன். பி.ஹச்.டி, எல்.எல்., அதுபோன்று பட்டத்தை பெற்றிருக்கிறேன். இப்பொழுது நான் என்னுடைய ஊழியத்திற்கு ஆயத்தமாகிவிட்டேன்” என்று சொன்னாரா? இல்லை ஐயா. அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் யோவானைப் போல வனாந்திரத்திற்கு சென்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு வெளியே வந்தார். அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்த போது தன்னை எப்படியாய் அடையாளப்படுத்திக் கொண்டார் என்று பாருங்கள். யோவானைப் பின்பற்றிக் கொண்டிருந்த அந்திரேயா எனப்பட்டவன் இயேசுவை அறிந்து கொள்ளும்படி அவரோடே கூடச் சென்று அவருடைய கூட்டங்களில் கலந்துகொண்டு பிறகு தன்னுடைய சகோதரனாகிய சீமோனை அழைத்து வந்தான். சீமோன் இயேசுவின் பிரசன்னத்தில் வந்தபோது, அவர் “உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்” என்று சொன்னார். அது அவரை அடையாளப்படுத்தினது. சரியாக அந்த இடத்திலேயே அவனுடைய பெயர் சீமோனிலிருந்து பேதுருவாக மாற்றப்பட்டது. பேதுரு என்றால் ஒரு “சிறிய கல்” என்று அர்த்தமாகும். பின் நாட்களில் சபைக்கு தலைமையானவனாக மாறினான். 46அதன் பிறகு அந்த இடத்தில் பிலிப்பு என்ற பெயருடைய ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் “ஒரு நிமிடம் பொறுங்கள், நாம் நானூறு வருடங்களாக தீர்க்கதரிசியை கொண்டிருக்கவில்லை. ஆகையால் அடுத்த தீர்க்கதரிசி எப்படியாக இருப்பார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று சொன்னான். அதன் பிறகு அவன் மலைகளைச் சுற்றி கிட்டத்தட்ட பதினைந்து மைல்கள் தூரம்பிரயாணப்பட்டு தன்னுடன் வேதாகம பாடங்களை ஒன்றாய் பயின்ற அவனுடைய நண்பனைக் கண்டுபிடித்தான். நீங்கள் எப்பொழுதாவது அங்கே இருந்திருப்பீர்களானால் அதினுடைய தூரம் எவ்வளவு இருக்கிறது என்று குறிப்பிடுவீர்கள். அவனுடைய பெயர் நாத்தான்வேல். அவன் மிகவும் உறுதியான பண்புடைய மனிதன். அவனுடைய வீட்டிற்குச் சென்றபோது அவனுடைய வீட்டிலே அவன் இல்லாமல் இருந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு வேளை அவனுடைய மனைவி “அவர் வெளியே ஒலிவத்தோப்பில் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்” என்று சொல்லி இருக்கலாம். ஆகவே பிலிப்பு உபாகமம்: 18:15-ல் சொல்லப்பட்ட “ஒரு தீர்க்கதரிசி எழும்பினார்” என்ற முழு அடையாளம் நடந்தேறினதைக் கண்டு மிகவும் பூரிப்படைந்திருந்தான். ஆகவே அங்கிருந்து கடந்து போய் நாத்தான்வேலை சந்தித்து 'நாத்தான்வேலே, நாங்கள் யாரைக் கண்டோம் என்று வந்து பார்“ என்றான். அங்கே சீதோஷன நிலைகளையும், மற்ற காரியங்களையும் குறித்து விசாரிக்க நேரம் இல்லை. ஏனென்றால் அவன் கொண்டு வந்த செய்தியானது மிக அவசரமாய் இருந்தது. அவனுடைய உள்ளம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றைக்கோ இது நமக்கு அதிகமானதொன்றாய் இருக்கிறது. இதைக் காட்டிலும் நமக்கு செய்ய அநேக காரியங்கள் இருக்கிறது. அவன் சொன்ன முதலாவது காரியம் என்னவென்றால் ”நாங்கள் யாரைக் கண்டோம் என்று வந்து பார், நசரேயனாகிய இயேசுவை, யோசேப்பின் குமாரனை“, என்றான். 47இப்பொழுது அவர்கள் கடற்கரை ஓரமாக நடந்து வந்த போது என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று சற்று பார்ப்போம். பிலிப்பு நாத்தான்வேலிடம், “அந்த வயதான மீனவன் ஒருவன் அங்கே இருந்தானே உனக்கு தெரியுமே?” என்று கேட்டதை என்னால் கேட்க முடிகிறது. ஓ, சமீப நாட்களுக்கு முன்பாக மரித்துப்போன வயதான யோனாவைத் தானே? என்றான். அதற்கு பிலிப்பு இல்லை, இல்லை அவருடைய மகன் சீமோனைக் குறித்துப் பேசுகிறேன் என்றான். ஓ, ஆம், ஆம், நான் அவரிடமிருந்து மீன் வாங்கினது எனக்கு ஞாபகமிருக்கிறது. சரி இப்பொழுது அவருக்கு என்ன? அவருடைய சொந்தப் பெயரைக் கூட கையெழுத்திடப் போதுமான கல்வி பெறாதவராயிருந்தாரே. என்னுடைய ரசீதிலே கூட அவரால் கை எழுத்துப் போட முடியவில்லையே“ என்றான். (வேதாகமம் அவர் படிப்பறியாதவர் என்றும் பேதமையுள்ளவரென்றும் கூறுகிறது. ஆனால் அவர் இயேசுவோடு இருந்ததை அவர்கள் கண்டார்கள் என பார்க்கிறோம். ஆகையால் ரசீதுகளிலே கூட கையெழுத்துப் போட முடியாதவராய் இருந்தார் என்பதைக் காண்கிறோம்). அவனோ ஆம், அது சரி தான். “உனக்கு என்னவென்று தெரியுமா?அவன் இந்த மனிதரின் பிரசன்னத்தில் வந்தபோது, இதுவரை அவர் அவனை அறியாதிருந்தும் அவனுடைய பெயர் சீமோன் என்றும் அவன் யோனாவின் குமாரன் என்றும் சொன்னார்” என்றான். இவர் அந்த மேசியா அல்லவா? என்று கேட்டான். இவர் அந்த ஒரு தீர்க்கதரிசி அல்லவா? இவர் உபாகமம் 18-ல் கூறப்பட்டபடி வேதவாக்கியங்களின் நிறைவேறுதல் இல்லையா? நாம் எந்த நாளில் ஜீவிக்கிறோம் என்று அவருடைய வாழ்க்கையில் நடைபெறுகிற காரியங்களை ஆராய்ந்து பார். நாம் இந்த மேசியாவிற்காக காத்துக் கொண்டு நம்முடைய நாட்களை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எபிரேயர்களாகிய நாம் எல்லோரும். அது சரி இல்லையா? என்றான். 48அதற்கு நாத்தான்வேல் “ஓகோ, ஒரு நிமிடம் பொறு, அது உண்மையா என்று நான் காணட்டும்” என்றான். நல்லது, அவர் உன்னை குறித்து அறியாதிருப்பாரானால், நான் ஆச்சரியப்படமாட்டேன் என்றான். “ஊ - ஊ - ஊ - நான் அதை பார்க்கட்டும். அவருடைய கூட்டங்களில் ஏதாவது ஒன்றில் கலந்து கொண்டு அவைகள் நடைபெறுகிறதா என்று பார்க்கட்டும்” என்றான். “நல்லது”, அவன் அந்த விதமாக இயேசு நின்றுக் கொண்டிருந்த கூட்டத்திற்கு நேராக கடந்து வந்தான். அப்பொழுது அவர் “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். அதற்கு அவன், “போதகரே, நீர் என்னை எப்படி அறிந்தீர்?” என்றான். அதற்கு அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அந்த மரத்தின் கீழ் இருந்த போது உன்னைக் கண்டேன்“ என்றார். அவ்வளவு தான் காரியம்! அவ்வளவு தான் காரியம்! அது எதைக் குறிக்கிறது? “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்”. அவர் வார்த்தையில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். படித்த இந்த வாசகர் அவரைக் குறித்து என்ன சொன்னார்? “ரபி, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான். 49ஆனால் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த சிலர், அவரை விசுவாசியாதிருந்தவர்கள். “இவன் பெயல்செபூல்” என்றார்கள். அதற்கு இயேசு,“தேவ ஆவியை அசுத்தமானதாக அழைத்ததற்காக உங்களை நான் மன்னித்துவிடுகிறேன்” ஏனென்றால் பரிகாரமானது இன்னும் செலுத்தப்படவில்லை. ஆனால் “பரிசுத்த ஆவியாகிய அவர்...” அவர் என்று சொல்வது தனிப்பட்டஒரு பிரிதிப் பெயராக இருக்கிறது. அது ஒரு எண்ணம் அல்ல அவர் ஒரு நபர். “பரிசுத்த ஆவியானவர் வரும்போது இதே காரியங்களைச் செய்தால், அவருக்கு விரோதமாக பேசும், ஒரு வார்த்தையும் அவனுக்கு மன்னிக்கப்படாது” என்றார். நினைவில் கொள்ளுங்கள் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அடையாளப்படுத்தப்பட்ட வார்த்தை மாம்சமானது. இப்பொழுது அவர் யூதர்கள் மத்தியில் செய்ததைப் பார்க்கிறோம். 50இப்பொழுது மூன்று விதமான இனம் மாத்திரம் தான் இருக்கிறது. நாம் எத்தனை இணைப்புகளையும், பிரிவுகளையும் கொண்டிருந்தாலும், இன்னும் நீங்கள் விரும்புகிற படி எப்படி வைத்துக் கொண்டாலும், அதில் எனக்குக் கொஞ்சம் கூட ஈடுபாடு இல்லை. நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனாய் எல்லா மனுஷருக்கும் ஊழியம் செய்கிறேன். இதை உங்களுக்குச் சொல்லட்டும். கவனியுங்கள். யூதர், சமாரியர் மற்றும் புறஜாதியினர் மட்டுமே இருந்தார்கள். பேதுரு திறவுகோலை கொண்டிருந்தான் என்று சுவிசேஷம் கூறுகிறதைக் கவனியுங்கள். அவன் பெந்தெகொஸ்தே நாள் அன்று யூதர்களுக்கு சுவிசேஷத்தைத் திறந்து கொடுத்தான். பிலிப்பு சமாரியர்களிடத்தில் சென்று அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, பிசாசுகளைத் துரத்தின பிறகும் அவர்கள் மேல் இன்னும் பரிசுத்த ஆவி வராமல் இருந்தபோது பேதுரு வந்து அவர்கள் மேல் கைகளை வைத்த பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள். மற்றும் கொர்நேலியுவின் வீட்டில் புறஜாதியினர் அதைப்பெற்றுக் கொண்டார்கள். 51இப்பொழுது புறஜாதியாராகிய நாம், நாம் ஆங்கிலோ சாக்சன்களாக இருந்தோம். நாம் எந்த மேசியாவிற்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. நாம்அஞ்ஞானிகளாய் இருந்தோம், தண்டாயுதத்தை முதுகில் சுமந்து, விக்கிரகங்களை வணங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் யூதரும் சமாரியரும் மேசியாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்காக மாத்திரமே அவர் வருகிறவராய் இருக்கிறார். இந்த கூட்டத்தில், அவரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை மாத்திரமே அவர் சந்திப்பார் என்று உங்கள் மனதில் கொண்டிருங்கள். 52கடைசியாக, ஒரு நாளில் அவர் எரிகோவிற்குப் போய்க் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அந்த மலைகளைச் சுற்றி சமாரியா வழியாகக் கடந்துசெல்ல வேண்டியதாயிருந்தது. அவர் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். இப்பொழுது அவர் தன்னை மேசியா என்று அடையாளப்படுத்தி, மேசியாவின் அடையாளத்தை காண்பித்தார். இருப்பினும் அவர்கள் அவரைத் தூஷித்தனர். ஆகவே அவர் சமாரியா வழியாகச் செல்ல வேண்டியதாய் இருந்தது. ஏனென்றால் சமாரியர்களும் கூட மேசியாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர் சிகார் என்னும் பட்டணத்திற்கு வந்திருந்தார். அது ஏறக்குறைய பன்னிரண்டு மணியாக இருந்தது. அங்கே அவர்களுடைய பட்டணத்தின் வாசலுக்கு வெளியே ஒரு கிணறு இருந்தது. அது இன்னுமாக அங்கே இருக்கிறது. மக்கள் அதினண்டை உட்கார வருவார்கள். தண்ணீர் எடுப்பதற்காக அந்த பொது அடி குழாய்க்கு எல்லோரும் வருவது வழக்கம். அது அடி குழாய் போன்று அல்ல. அதில் அவர்கள் இராட்டினத்தின் மூலமாக ஒரு ஜாடியை கீழே இறக்கி தண்ணீரை எடுப்பார்கள். இன்றைக்கும் தண்ணீர் எடுக்கும் படி பெரிய ஜாடிகளைக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் கீழே சிந்தாமல் தண்ணீரை கச்சிதமாய் கொண்டு செல்லுகிறதை குறித்துப் பேசும்போது, உங்களில் சில ஸ்திரீகள் தலைகளில் புத்தகங்களை வைத்து விழாமல் கச்சிதமாய் நடந்து செல்வதைப் போன்று இருப்பதாகும். நீங்கள் அந்த ஸ்திரீகள் ஐந்து கேலன் (ஒரு கேலன் 4.5 லிட்டர்) ஜாடியை தலையின் மேல் வைத்தும் ஒன்றை இடுப்பில் வைத்தும் கச்சிதமாக லாவகமாக ஒவ்வொருவரும் பேசிக் கொண்டு சரியாய் நடக்கிறதைப் பார்க்க வேண்டும். 53அப்படியாக அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது கிட்டத்தட்ட பகல் பதினோரு மணி, மதிய வேளையாக இருந்தது. அப்பொழுது அவர் சீஷர்களை பட்டிணத்துக்குள்ளே உணவுப் பண்டங்களை வாங்கும்படி அனுப்பி இருந்தார். அப்பொழுது அந்த பட்டிணத்தில் ஒழுக்கங்கெட்ட ஸ்திரீ என்ற பெயரோடு ஒரு ஸ்திரீ இருந்தாள். அவள் மற்ற ஸ்திரீகளோடு சேர்ந்து இருக்கும்படி அனுமதிக்கப்படவில்லை.ஆகவே அவளுடைய தண்ணீரின் பாகத்தை எடுத்துக் கொள்ளும்படி அங்கு வந்திருந்தாள். அவள் அங்கு வந்த பின் குடத்தை கீழே இறக்கி வைத்துப் பார்த்தபோது,அங்கே சுவற்றின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு மனிதன் “ஸ்திரீயே எனக்கு தாகத்திற்கு தா” என்றார். இப்பொழுது யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் நேரடியான ஒரு பிரிவினை இருந்தது. ஆகவே அவள் உடனடியாக அவரிடம் அவளைப் போன்ற பெண்ணிடம் அவரைப் போன்ற ஒரு மனிதர் எந்த உதவியும் கேட்பது வழக்கம் இல்லை என தெரியப்படுத்தினாள். ஏனென்றால் யூதருக்கும் சமாரியருக்கும் எந்த ஒரு பொதுவான காரியமோ அல்லது உணர்வோ இல்லாமல் இருந்தனர். அவர் அவளை நோக்கி, “உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்று நீ அறிந்திருப்பாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், மற்றும் இங்கே வந்து மொண்டு கொள்ள வராமல் இருக்கும்படி அவர் உனக்குத் தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்”. 54அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அந்த ஸ்திரீயின் ஆவியைத் தொடர்புகொண்டிருந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசி. பிறகு அவர்களிடையே உரையாடல் என்னவாக இருந்தது என்றால், எருசலேமில் தொழுது கொள்ளவேண்டுமா? அல்லது மலையில் தொழுது கொள்ளவேண்டுமா?அதற்கு அவர் “ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிறவர்களை பிதாவானவர் தேடுகிறார்” என்றார். அந்த ஸ்திரீயின் பிரச்சனை என்னவென்பதை அவர் கண்டு பிடிக்கும் மட்டும் அவளோடு சம்பாஷித்து கொண்டிருந்தார். சரியாக அவளுடைய பிரச்சனை என்ன என்று அவர் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். நாம் எல்லோரும் அதை அறிந்திருக்கிறோம். வேதாகமத்தில் யோவான்: 4-ஆம் அதிகாரத்தில் அதை வாசிக்கிறோம். அதில் என்ன பார்க்கிறோம்? அவளுக்கு அநேக புருஷர்கள் இருந்தார்கள். அவர் அவளை நோக்கி, “நீ போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா” என்றார். அதற்கு அவள், “எனக்கு புருஷன் இல்லை”, என்றாள். நீ சொல்கிறது, “உண்மைதான். உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள்” என்றார். இப்பொழுது, அந்நாட்களில் இருந்த ஆசாரியர்களுக்கும் இந்த ஸ்திரீக்கும் உள்ள வித்தியாசத்தை கவனியுங்கள். அவள் அவரை நோக்கி, “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். நாங்கள் நானூறு வருடங்களாக எந்த தீர்க்கதரிசியையும் கொண்டிருக்கவில்லை, நீர் தீர்க்கதரிசி என நான் காண்கிறேன். மேசியா வரும்போது, இந்த காரியங்களைச் செய்வார் என நாங்கள் அறிந்திருக்கிறோம்“ என்றாள். அது சரி தானே? ”அவர் வரும்போது, இந்த காரியங்களைச் செய்வார் என்றும் இதை எல்லாம் அவர் எங்களுக்கு அறிவிப்பார் என்றும் அறிந்திருக்கிறோம்“ என்றாள். அதற்கு அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்”, என்றார். 55அங்கே ஒரு சாதாரணமான மனிதனாக, முப்பது வயதுடையவராய் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒருவேளை அவர் பார்ப்பதற்கு ஐம்பது வயதுடையவரைப் போல தோற்றமளித்திருப்பார். ஏனென்றால் யோவான்: 6-ஆம் அதிகாரத்தில் “உனக்கு ஐம்பது வயது கூட ஆகவில்லை ஆனால் ஆபிரகாமைப் பார்த்தேன் என்று சொல்லுகிறாயே, நீ பிசாசு பிடித்தவன் என்று அறிகிறோம்” என்று சொன்னார்கள். ஆனால் அவரோ “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்”, என்றார். ஆகவே அவர் அங்கே ஒரு வாலிபனாய், ஒருவேளை தன்னுடைய முகதாடி சிறிது நரைத்தவராய், அவருடைய வேலையின் நிமித்தமாக அவருடைய சரீரம் நலிவுற்று அவரை விரும்பத்தக்க சவுந்தரியம் அவருக்கு இல்லாதிருந்தது. ஒரு பழைய தகசுத்தோலைப் போல் காணப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்குள்ளாக இருந்தது என்னவென்றால், ஷகினா மகிமை. அதற்குள்ளாக இருந்தது என்னவென்றால், தேவன் இருந்தார்‚ இது எதைக் காட்டுகிறது? அங்கே அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வதின் மூலம்; அவர் தேவனுடைய வார்த்தை என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பாருங்கள், அது தேவனுடைய வார்த்தையாக இருந்தது. அவரே தேவனுடைய வார்த்தையாய் இருந்தார். இன்னும் அந்த தேவனுடைய வார்த்தை அதையே செய்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். புரிகிறதா? உங்களுடைய சிந்தனைக்கு எட்டுகிறதா? கவனியுங்கள், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். 56அந்த ஸ்திரீ பட்டணத்திற்குள் ஓடி “நான் செய்தவைகளை எல்லாம் எனக்கு அறிவித்த மனிதனை வந்து பாருங்கள். இவர் அந்த மேசியா அல்லவா? என்று கூறினாள். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் அதுவே மேசியாவின் அடையாளமாக இருக்குமென்றால் அவர் பாரபட்சம் பார்க்காதவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் மற்றும் யூதர்களுடனும் சமாரியர்களுடனும் இடைபடும் முடிவின் நாட்களில் இது நடைபெறும் என்றால் இப்பொழுது இதுவே புறஜாதி காலத்தின் முடிவாய் இருக்கிறது. அவர் சீர்திருத்தவாதிகள் மற்றும் அது போன்று கடந்து வந்து, இந்த முடிவின் நாட்களில் “ஆபிரகாமின் நாட்களில் இருந்தது போல, இந்த கடைசி நாட்களில் புறஜாதியாரின் முடிவின் நேரத்தில் மனுஷகுமாரன் வெளிப்படும் போது நடக்கும்” என்று வாக்குத்தத்தம் பண்ணினபடி மீண்டும் வருவார். 57அநேக காரியத்தை சொல்லலாம். ஆனால் நான் சற்று துரிதப்படுத்தட்டும். ஏனெனில் ஒன்பது மணி ஆகிவிட்டது. கர்த்தருக்கு சித்தமானால் ஒன்பது முப்பது மணிக்கு வெளியேகடந்து செல்லலாம். 58இப்பொழுது, சகரியா 14:6-ல் தீர்க்கதரிசி இப்படியாக சொல்லுகிறதை கவனியுங்கள். “ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல இரவுமல்ல அது மந்தாரமான நாளாய் இருக்கும் ஆனால் சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்”. இப்பொழுது வேகமாக கவனியுங்கள். ஒரு வேதவாக்கியமும் விழுந்துபோக முடியாது. அவை எல்லாமே நிறைவேறி ஆக வேண்டும். இப்பொழுது சூரியன் எந்த திசையில் உதிக்கிறது? எங்கே உதயமாகிறது? கிழக்கிலே உதிக்கிறது. எங்கே மறைகிறது? மேற்கிலே மறைகிறது. நாகரிகம் எப்படி சூரியன் உதயமாகிற திசையிலே தோன்றி பயணம் செய்ததோ அது போலவே சுவிசேஷமும் பிரயாணம் செய்தது. புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது நாம் சரியாக மேற்கு கடற்கரையின் பக்கமாய் இருக்கிறோம். நாம் சற்று கடந்து செல்லுவோம் என்றால் மறுபடியும் கிழக்கிற்கே வந்தடைவோம். பசிபிக் பெருங்கடலை சுற்றி கடந்து மறுபடியும் கிழக்கிற்கே வந்துவிடுவோம். அவ்வளவு தான் அங்கு வேறு எதுவும் இருக்காது. பாருங்கள், இப்பொழுது நாகரிகமானது சூரியனோடு பயணம் செய்திருக்கிறது. 59சுவிசேஷமானது தண்ணீர்களைக் கடந்து வந்தது. அது பரிசுத்த பவுல் மூலமாக மத்தியதரைக் கடலைக் கடந்து ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து ஆங்கிலக் கால்வாய் மூலமாகக் கடந்து இங்கிலாந்திற்கு வந்தது. இங்கிலாந்திலிருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து அமெரிக்க ஐக்கிய தேசத்துக்குச் சென்று மறுபடியும் பசிபிக் சமுத்திரத்திற்கே வந்துவிட்டது. கவனியுங்கள், கிழக்கிலே உதித்த அதே சூரியன் (S-U-N-) தான் மேற்கிலும் மறைகிறது. மற்றும் பெந்தெகொஸ்தே நாள் அன்று கிழக்கிலே இறங்கின. அதே பரிசுத்த ஆவியானவர் தான்.... இப்பொழுது ஒரு நாள் உண்டு, அதைப் பகல் என்று அழைக்க முடியாது அது மப்புள்ளதாக மந்தாரமுமான நாளாய் மழை பெய்கிறதாய் இருக்கும். அதை நீங்கள் இந்த கான்சாஸ் பட்டணத்தில் மழையும் மந்தாரமுமான நாளைப் பார்க்கிறீர்கள் அல்லவா, அது போலவே இருக்கும். இதுவரை நாம் சபையிலே சேர்ந்து மற்ற காரியங்களைச் செய்வதற்கு போதுமான அளவு வெளிச்சத்தைக் கொண்டிருந்தோம். அப்படி செய்வதற்குப் போதுமான அளவிற்கு வெளிச்சம் இருந்தது. ஆனால் சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும் அப்பொழுது குமாரன் (SON) திரும்பவுமாக வருவார் என்று கூறினார். பரிசுத்த ஆவியானவர் தாமே இந்தக் கடைசி நாட்களில் தேவனுடைய முழுமையான வல்லமையோடு திரும்பவும் வார்த்தை பிரத்தியட்சமானவராய் வந்திருக்கிறார். 60இது ஒரு கூர்நுனிக் கோபுரம் வளருகிறதைப் போன்று இருக்கிறது. முதலாவது, சீர்திருத்தவாதிகளான லூத்தரன், வெஸ்லி மற்றும் பெந்தெகொஸ்தேயினர் வந்தனர். இப்பொழுது சரியாக உச்சிக்கு வந்திருக்கிறது. தலைக் கல்லானது கோபுரத்திற்கு மேலாக திரும்பவும் வரும்போது, அது கச்சிதமாக மற்றது பொருத்தப்பட்டதைப் போன்று பொருத்தப்பட வேண்டும். அதின் நடுவிலே ஒரு சிறிய சவரன் கத்தியையும் (Blade) கூட நுழைக்க முடியாத அளவுக்கு பரிபூரணமாய் இருக்கும். அப்படியே இந்தக் கடைசி காலத்தில் ஊழியமும் மிக கச்சிதமாய் அதற்கு நெருங்கியிருக்கும். உங்களுடைய கை அசலானதாய் இருந்து அதினுடைய நிழல் பார்ப்பதற்கு எதிர்மறையாக இருந்தாலும் சில நேரம் கழித்து அவை இரண்டும் ஒன்றாக ஆகிவிடும். அது அப்படியே ஒன்றாக ஆகும். அதே விதமாக தான் சபையும் கிறிஸ்துவுக்கு மணவாட்டியாகி கணவன் மனைவியைப் போல் ஒன்றாகுவார்கள். பாருங்கள், அவள் சரியாக இந்த கடைசி நாட்களில் அப்படியாக வந்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் நாம் வேறு ஒரு நாளின் வெளிச்சத்தில் ஜீவிக்க முயற்சிக்கிறோம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் தன்னை முழுமையாக எபிரேயர் 13:8-ல் குறிப்பிட்டபடி இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். 61நாம் லூத்தரின் காலத்தில் அதாவது சர்தை காலத்தில் ஜீவித்திருப்போம் என்றால், மிக திட்டவட்டமாக லூத்தர் தான் செய்தியாளன் என்று சொல்லுவோம். ஒரு குதிரைவெளியே வரும்போது எப்படி மற்ற எல்லாமும் அதைப் பின் தொடர்கிறதோ அது போலவே அக்காலத்தில் உள்ள மற்ற எல்லாமும் அதினோடே சென்றது. பிலதெல்பியா காலமாகிய வெஸ்லியின் காலத்தைப் பார்க்கிறோம். சகோதர அன்பைக் குறித்து ஒரு மிகப் பெரிய எழுப்புல் கடந்து சென்றது. வெஸ்லி எங்கே இருப்பார் என்று வேதம் கூறினதோ சரியாக அவர் அந்த இடத்தில் இருந்ததைக் காண்கிறோம். இன்றைக்கும் அவர் எங்கே இருப்பார் என்று சொன்னாரோ அந்த நேரம் இதுவே. இங்கு நாம் சரியாக அவர் சொன்ன அந்த நேரத்தில் ஜீவிக்கிறோம். 62கவனியுங்கள், '“ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று சொன்ன அந்த கிரேக்கர்கள் அவரைக் காணத் தவறினார்கள். ஏன் தெரியுமா? ஒரு மனிதனாக மனித ஆலயத்தில் தேவன் இருந்ததினிமித்தமாய் அவரைக் காணத் தவறினார்கள். மனித சரீரமே அவர்களைக் குருடாக்கினது. அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. “நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவனாக்குகிறாயே, அல்லது தேவனுக்குச் சமமாக ஆக்கிக் கொள்கிறாயே” என்றார்கள். “இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக சரி, தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? வேத வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாத தாயிருக்க” என்றார். அவரே அந்த நாளுக்கென்று கொடுக்கப்பட்ட வார்த்தையின் நிறைவாக, தேவ குமாரனாக, மீட்பராக, தேவனே பூமியில் வந்து, மனிதனில் நிவாசம் செய்து, மரணத்தை தன்மேல் எடுத்துக் கொண்டு எல்லோரையும் மீட்கும்படியாக ஏதேன் தோட்டத்தில் இருந்த ஜீவவிருட்சமாகிய அவரே, அந்த ஸ்திரீ அல்ல இரண்டாம் ஆதாமாகிய அந்த மனிதனே மரித்து, அவர்களுடைய மூலப் பொருளை கொண்டு வரும்படி பூமிக்குள் சென்று ஆமென்; விழுந்து போன இலைகளை மறுபடியும் உயிர்த்தெழுதலில் எழும்பும்படி செய்யச்சென்றார். ஓ, இதைக் குறித்துப் பேசுவோம் என்றால் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருக்கலாம்‚ 63இப்பொழுது நாம் இதைப் பிடிக்க வேண்டும். அந்த நாட்களில் இருந்த புறஜாதியினர் அவரைக் காண தவறவிட்டார்கள். ஏனென்றால் அவர் மனித சரீரத்தில் இருந்தார். நாமும் அப்படியே செய்வோமோ என்று வியக்கிறேன். அவர்கள் தவறினதைப் போல நாமும் அவரை அறியாமல் அந்த சோகமான தவறைச் செய்வோமோ என்று வியக்கிறேன்?. ஏனென்றால், அவரே அக்காலத்தில் வார்த்தையாய், மாம்சத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார். எந்த கல்வியும் இல்லாத பையனைப் போன்று இருந்தார். அவர் பள்ளிக்குச் சென்றார் என்று இதுவரை எங்கும் கேள்விப்பட்டதில்லை. அந்நாட்களில் இருந்த ஸ்தாபனத்தில் இருந்து வந்தார் என்பதற்கான எந்த ஆவணமும் இல்லை. கல்வியும் இல்லை. எந்த ஒரு காரியத்திலும் பிரபலமாயிருக்கவில்லை. ஆனால் “பைத்தியக்காரன், மது அருந்துபவன், பாவிகளின் நண்பன், உலகத்தை தலைகீழாக மாற்றியவன், முறைகேடாகப் பிறந்தவன், அவனுடைய தாய் ஒரு போர்வீரனால் கர்பந்தரிக்கப்பட்டவள், இவை எல்லாமும் இருக்க அவன் தனக்கு தேவனுடைய குமாரன் என்று பெயரை எடுத்துக் கொண்டான் அல்லது கலிலேயனாகிய இவன் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்து கொண்டான்” என்பதைத் தவிர வேறு எந்த ஒரு பெயரும் அவருக்கு இல்லை. 64ஆனால் வார்த்தை பிரத்தியட்சமானது. “அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்”. அவ்விதமாகவே இன்றைக்கும் கூட. இந்த மகத்தான பரிசுத்த ஆவியின் அசைவு பிரத்தியட்சமாவதைக் காணும்போது, “அவரை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” என்பதாக இருக்கும். ஏனென்றால் இயேசு கிறிஸ்து எல்லா சந்ததியிலும் அவருடைய வார்த்தையின் படியாகவே தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டார். நம்முடைய தலைகளை வணங்குவோம். 65கிறிஸ்தவ நண்பர்களே, உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். நாம் சற்று நிறுத்தி கூறப்பட்டவைகளெல்லாம் சத்தியமா அல்லது பிழையா என்று சற்று சிந்தித்துப் பார்க்கலாம். சிந்தியுங்கள்? இது சத்தியமாக இருக்கும் பட்சத்தில் அதை ஒவ்வொன்றையும் நிறைவேற்ற கடன்பட்டவர்களாய் இருக்கிறோம். நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்? இதற்கு முடிவுதான் என்ன? இது சத்தியம் என்று திட்டவட்டமாய் அறிந்து கொள்ள வழி உண்டோ? இப்பொழுது, “ஆதியிலே அவர் வார்த்தையாய் இருந்தார்”, வார்த்தையானது உள்ளத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாய் இருக்கிறது. அது தீர்க்கதரிசிகள் மூலமாய் நடந்தேறினதைப் பார்க்கிறோம். கிறிஸ்துவின் மூலமாக நடந்தது. மற்றும் இந்தக் கடைசி காலத்திலேயும் அதை நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார். ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். 66பரலோகப் பிதாவே, இந்த இரவின் பொழுதில் உம்முடைய வார்த்தையை எடுத்து இங்கு கூடியிருக்கிற இந்த சிறிய கூட்டத்தார் இருதயத்தில் பொருத்தும்படியாக கேட்கிறோம். ஆண்டவரே, நாங்கள் அவருடைய வருகையின் நிழலில் ஜீவிக்கிறோம் என்பதையும், ஒவ்வொரு வருடமும் அந்த நிழல் நிஜமாகிக் கொண்டு வருகிறதையும் உணருகிறோம். அடையாளங்கள் தோன்றுகிறதையும். பயமுறுத்துகிற காரியங்கள் நடக்கிறதையும் செய்தித் தாள்களிலும், பத்திரிகைகளிலும் வாசிக்கிறோம். சந்திரன் இரத்தமாக மாறுகிறது, உலகெங்கிலும் பூமி அதிர்வானது வெடித்து பூமியை சிதறடிக்கிறதையும் கேள்விப்படுகிறோம். இப்பொழுது, அன்றொரு நாளிலும் தேவகுமாரன் அதிகாரப்பூர்வமாக புறக்கனிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டபோது முழு உலகமும் உலுக்கப்பட்டதையும் (Shook) காண்கிறோம். லவோதிக்கேயா சபை காலத்தில் அவர்கள் சொன்னது போல “அவர் சபைக்கு வெளியே இருந்து கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வர முயற்சிக்கிறார் என்கிற விதமாக, உலக சபைகளின் சங்கம் என்கிற ஒரு பெரிய குழுவினர் அவரை அதிகாரப்பூர்வமாக வெளியே தள்ளிவிட்டனர். இதனால் மற்றொரு பூமியதிர்ச்சி ஏற்பட்டு மற்ற தேசங்களை, அல்ல; இந்த தேசத்தையே தாக்கியது; அது. முழு உலகத்தையும் உலுக்கியது; இயேசு அதிகாரப்பூர்வமாக வெளியே துரத்தப்பட்டார். இன்றிரவு அவர் நின்று கெஞ்சிக் கொண்டு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்பதை முழுவதுமாக அடையாளப்படுத்துகிறார். விசுவாசிகள் தாமே அதைக் காணட்டும். வியாதியாய் இருக்கிறவர்கள் அதைக் காணட்டும் ஆண்டவரே, கடந்து போன நாட்களில் அவர்கள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டதைப் போன்று இன்றிரவு இங்கிருக்கிறவர்களும் தொடட்டும். சுகவீனமாவர்களை சுகமாக்கும், இழக்கப்பட்டவர்களை இரட்சியும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 67நாம் நேரத்திற்கு முடிக்க சரியாக இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கிறது. இப்பொழுது ஜெப வரிசைக்கு செல்வதற்கு முன்பாக இதை சற்று சொல்லட்டும். மற்றவர்களைப் போன்று நானும் மனிதன் தான். அவர்களைப் போன்று என்னுடைய வார்த்தைகளும் தவறிப்போகும். எல்லா தீர்க்கதரிசிகளும் எல்லோரும் தவறு செய்தார்கள் என்று இன்றிரவு உங்களுக்கு நிரூபித்துக் காட்டினேன். ஆனால் தேவன் ஒருபோதும் தவறு செய்யமாட்டார். அவருடைய வார்த்தை சத்தியமாய் இருக்கிறது. அவரே வார்த்தை என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் ஆமென் என்கின்றனர்) கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதின் மேலாக என்னுடைய விசுவாசமும் கட்டப்பட்டிருக்கிறது. இயேசுவின் இரத்தத்திற்கு குறைவான எதன் மேலாகவும் என்னுடைய விசுவாசம் கட்டப்படவில்லை. சரியாக அதின் மேலாகவே கட்டப்பட்டிருக்கிறது. இயேசுவே வார்த்தையாக இருக்கிறார். 68பில்லி இவ்விதமாக... ஜெப அட்டைகளைக் கொடுத்தானா? ஜெப அட்டைகள் கொடுக்கப்பட்டதா? எனக்குத் தெரியவில்லை. முதலில் அவன் வந்து, “அவர்கள் எந்த ஜெப அட்டையும் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்” என்று சொன்னான். அவர்கள் அப்படி கொடுத்திருப்பார்கள் என்றால் நாம் ஒரு சிறிய ஜெப வரிசையை ஏற்படுத்தலாம். ஜெப அட்டை எண் “ஒன்றை” யாராவது வைத்திருக்கிறீர்களா? ஜெப அட்டை எண் ஒன்று யாரிடத்தில் இருக்கிறது என்று பார்ப்போம். சரி, எண் ஒன்றை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? இல்லையா. ஜெப அட்டை எண் ஒன்று யாரிடத்தில் இருக்கிறது? ஜெப அட்டை எண் ஒன்று இருக்கிறதா? சரி, ஒரு வேளை அவன் ஒன்றிலிருந்து கொடுக்காமல் இருக்கலாம். எத்தனை பேர்... என்னது (யாரோ ஒருவர் எண் ஒன்று இங்கே இருக்கிறது என்று கூறுகிறார்) ஓ, அங்கே இருக்கிறதா? சரி. நல்லது. ஜெப அட்டை எண் ஒன்று இங்கே மேலே வந்து என்னிடத்தில் நில்லுங்கள். எண் இரண்டு யாரிடம் உள்ளது? எண் மூன்று? சில நிமிடங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். ஜெப அட்டை எண் மூன்று யாரிடம் உள்ளது? அங்கே தூக்குப் படுக்கையில் இருக்கிறவரிடம் ஜெப அட்டை இருக்கிறதா என்று யாராவது பார்ப்பீர்களா? எண் மூன்று யாரிடம் உள்ளது? எண் நான்கு? யாரிடம் அட்டை எண் நான்கு இருக்கிறது? 69அந்த அட்டை ஒரு சிறிய அட்டை. அதை உங்களிடம் கொடுப்பதற்கு முன்பாக என்னுடைய மகனோ அல்லது வேறு சிலரோ வந்து அந்த அட்டைகளை எல்லாம் கலந்து விட்ட பின்னரே உங்களுக்குக் கொடுப்பார்கள். இவர்கள் இந்த விதமாகச் செய்ய காரணம் என்னவென்றால் ஒருசமயம் மக்கள் ஜெப அட்டைகளை விற்க முயற்சித்தார்கள். மற்றும் இப்படி செய்கிறதினிமித்தம் இங்கு யார் வருவார்கள் என மக்களுக்கு தெரியாமல் இருக்கும். ஆகவே அவர்களால் விற்பனை செய்ய முடியாது. நான் இங்கு வரும்போது எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து ஆரம்பிக்க மாட்டேன். ஏதாவதொரு எண்ணிலிருந்து ஆரம்பிப்பேன். இந்த வாரத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்களானால் நான் தலை கீழாக கடைசியில் இருந்தும் அங்கும் இங்கும், மேலிருந்து கீழ் எண்ணிற்குமாக அழைப்புக் கொடுத்தேன். அந்தபடியாக செய்யும் போது மக்கள் ஒவ்வொருத்தருக்கும் அந்தந்த நாளில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்படியாக இருக்கும். 70எண் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. ஒவ்வொன்றாக அழைக்கிறதற்கு காரணம் என்னவென்றால் இங்கு காதுகேளாதோர் இருப்பார் எனில் அவர்கள் என்னிடம் வந்து, “ஏன் என்னிடம் யாரும் சொல்லவில்லை என்று கேட்கக்கூடாது”. பாருங்கள், அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஜெப வரிசையிலே அவர்களுடைய இடத்தை அவர்கள் தவறவிட கூடும். தவறவிட்ட பின் அவர்கள் அவருக்கு இன்னொரு ஜெப அட்டையை ஒருவேளை கொடுக்காமல் போகக் கூடும். பாருங்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்கள் ஜெப வரிசையிலே அவர்களுடைய இடத்தை தவறவிடுவார்கள். தவறவிட்டபின் அவருக்கு இன்னொரு ஜெப அட்டையை அவர்கள் ஒருவேளை கொடுக்காமல் போகக்கூடும். பாருங்கள். ஜெப அட்டை எண் ஐந்து யாரிடம் உள்ளது? ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு, ஐந்து, ஜெப அட்டை ஐந்து? அது பரவாயில்லை, உங்களிடம் எண் ஐந்து இருக்குமானால், அங்கே எழுந்து நில்லுங்கள். நல்லது. எண் ஆறு? (டேப்பில் வெற்று இடம்) பதினொன்று, ஜெப அட்டை பதினொன்று. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, ஜெப அட்டை பத்து மற்றும் பதினொன்று, உங்களுடைய பக்கத்தில் இருக்கிறவரின் அட்டையை பாருங்கள். ஒரு வேளை அவர்கள் காது கேளாதவராய் இருக்கலாம். சுற்றிலும் பாருங்கள். அவர்கள் கூட்டத்தோடு கலந்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நல்லது. எத்தனை பேர் இருக்கிறார்கள் ராய்? அவைகளை எண்ணிப் பாருங்கள். பதினொன்று, பன்னிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து. ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு... பதினைந்து. நல்லது. இங்கு சற்று இங்கு நிறுத்துவோம். நமக்கு அதிக நேரம் இல்லை. 71இப்பொழுது ஜெப அட்டை இல்லாமல் தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரியே. அதே விசுவாசத்தோடு இருங்கள். இப்பொழுது நண்பர்களே இதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்த பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் ஜெப வரிசைக்காக அவர்கள் தயாராகுகின்ற நேரத்தில், நீங்கள் இங்கும் அங்குமாக போக வேண்டாம். ஏனெனில் நீங்கள் ஒரு ஆவியாய் இருக்கிறீர்கள். நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேத வசனங்களை எடுத்து வாசித்தும் உங்களுக்குச் சொல்லியும் இருக்கிறேன். அவர் செய்த அதே காரியத்தை மறுபடியும் இந்த கடைசி காலத்திலும் செய்ய வேண்டியவராய் இருக்கிறாரென்று உங்களுக்கு காண்பித்திருக்கிறேன், இருந்தாலும் மேலோட்டமாகவோ, தற்காலிகமாகவோ செய்வதல்ல. எத்தனை பேர் அவர் மல்கியா 4-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட படி அவர் திரும்பவும் தீர்க்கதரிசியின் செய்தியோடு வந்து தன்னை அடையாளப்படுத்தி பிள்ளைகளின் இருதயத்தை அப்போஸ்தலருடைய அதாவது பெந்தெகொஸ்தே பிதாக்களின் விசுவாசத்திற்கு திருப்ப வேண்டியதாய் இருக்கிறது என்று விசுவாசிக்கிறீர்கள்?. சரியாக அதுவே நடக்க வேண்டியதாக இருக்கிறது. ஏதோ ஒரு கோட்பாட்டிற்கு அல்ல; மூல விசுவாசத்திற்குத் திரும்ப போகும் படியாகவே, நாம் அதை நம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறோம். 72இப்பொழுது ஜெப அட்டை இல்லாமல் இருக்கிறவர்கள் இதை நினைவில் கொள்ளுங்கள். நான் அவருடைய ஊழியக்காரன், நீங்களும் அவருடைய ஊழியக்காரர்கள், தேவன் எனக்குள் இருக்கிறார் உங்களுக்குள்ளும் தேவன் இருக்கிறார். நீங்கள் தேவையோடு இருக்கிறீர்கள், உங்களுக்கு ஊழியம் செய்யும் படி நான் இங்கிருக்கிறேன். இந்த காரியம் நம்மை ஒன்று சேர்த்து. அதை தேவனாக்குகிறது. இப்பொழுது ஒரு விசை அந்த ஸ்திரீயானவள்... நான் உங்களுக்கு வேறொரு வசனத்தைக் கொடுக்கட்டும். அது பரிசுத்த யோவானிலும் இருக்கிறது என விசுவாசிக்கிறேன். அங்கே பெரும்பாடு உள்ள ஒரு ஸ்திரீ இருந்தாள். அவள் ஒருவேளை ஜெப அட்டை இல்லாமல் இருந்தாள் என்று சொல்லலாம். ஆனால் ஜெபிக்கப்பட விரும்பினாள். அங்கே அனேகர் இருந்ததினால் அவளால் அந்த ஜெப வரிசையில் வரமுடியவில்லை. ஆகவே அவள், “நான் அவருடைய வஸ்திரத்தை மாத்திரம் தொடுவேன் என்றால், நான் சுகமாவேன்” என்று சொல்லிக் கொண்டாள். அந்த சம்பவம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது?நிச்சயமாக நன்கு அறிந்திருக்கிறோம். அவள் என்ன செய்தாள்? அவள் அந்த கூட்டத்தினூடாக தன்னை உந்தித்தள்ளி அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். 73இப்பொழுது பாலஸ்தீன ஆடையானது பெரியதாயும் கீழே தொங்கிக் கொண்டும் இருக்கிறதை அறிவீர்கள். மற்றும் அது உள்ளாடையோடு கூட இருக்கும். அதன் ஓரங்களில் தூசி படிகிற அளவு அது அவ்வளவு நீளமாக இருக்கும். இப்பொழுது நீங்கள் ஒரு மனிதனுடைய மேல் வஸ்திரத்தின் (coat) ஓரத்தில் தொடுவீர்களானால் அதை அவன் உணர முடியாது. அப்படியென்றால் பாதங்கள் வரை தொங்கிக் கொண்டிருக்கிறதான அந்த அடர்த்தியான பெரிய பளுவான பாலஸ்தீன ஆடையைக் குறித்து என்ன? பாருங்கள்? அவர் சரீரபிரகாரமாக அதை உணரவில்லை. ஆனால் அவள் அவருடைய வஸ்திரத்தை தொட்டுவிட்டு திரும்பவும் கூட்டத்தினூடாக கடந்து சென்றுவிட்டாள். பிறகு அங்கே சென்று அமர்ந்தாள் என்று நினைத்துக் கொள்ளலாம். ஒருவேளை அவள் எழுந்து நின்று இருக்கலாம். ஆனால் அவள் உட்கார்ந்திருந்தாள் என்று வைத்துக் கொள்ளலாம். அங்கே என்ன நடந்தது? இயேசு சற்று நின்று “என்னைத் தொட்டது யார்?”என்று கேட்டார். அப்பொழுது அப்போஸ்தலனாகிய பேதுரு “இது ஒரு பொருந்தாத கேள்வி” என நினைத்துக் கொண்டான் என்று நீங்கள் அறிவீர்கள். ஏனென்றால் அநேகர்... அவன் அவரை கடிந்து கொண்டான்?. மற்றொரு வகையில் அவன் இந்த விதமாக சொல்லி இருக்கலாம். “பாரும், உம்மை எல்லோரும் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே. இப்படி கேட்கிறதினால் உமக்கு மன நிலை சரியில்லை என்று நினைப்பார்கள்” என்றிருப்பான். பாருங்கள்? “போதகரே! உம்மை எல்லோரும் தொட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களே?”, என்றான். அதற்கு அவர், “என்னிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டுப் போனதை உணருகிறேன். என் பெலன் சற்று குறைந்தது” என்றார். 74அந்த சிறிய ஸ்திரீ, அவரிடத்திலிருந்து வல்லமையை பெற்றுக் கொண்டாள். அவள் அங்கிருந்த கூட்டத்தாரை சுற்றிலும் நோக்கிப் பார்த்து அந்த ஸ்திரீ எங்கே இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளுக்கு என்ன தொல்லை இருந்தது என்றும் அவளுக்கு என்ன நேர்ந்தது என்றும் வெளிப்படுத்தினார். வேதமானது “அவரே, நம்முடைய பலவீனங்களுக்காக தொடப்படத்தக்க பிரதான ஆசாரியராய்நமக்கு இருக்கிறார்” என்று கூறுகிறது. அது சரியா? இப்பொழுது அதே இயேசுவின் மேல் அதே விசுவாசத்தை வைத்திருப்பீர்களானால், உங்களுக்கும் அதே காரியத்தைச் செய்யும். இப்பொழுது உண்மையான பயபக்தியுடன் இருங்கள். ஜெபியுங்கள்.சந்தேகப்படாதிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று விசுவாசியுங்கள். அப்போது அவர் உங்களுக்கு இந்த ஆசீர்வாதங்களை எல்லாம் அருளிச் செய்வார். 75இப்பொழுது பிதாவே, என்னுடைய மாம்சத்திலும் அவர்களுடைய மாம்சத்திலும் வார்த்தை அடையாங்கண்டு கொள்ளப்பட்டதை உம்முடைய மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுக்கு வெளிப்படுத்துவாராக. மற்றும் எங்களோடு இருப்பேன் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே இன்று பிரசங்கிக்கப்பட்ட உம்முடைய வார்த்தையாகிய இன்றைய நாளின் வாக்குத்தத்தத்தை எடுத்து எங்களுக்கு வியாக்கியானம் பண்ணுவாராக. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். “இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று மாற்கு: 16-ல் சொல்லப்பட்டபடியாக உம்முடைய வார்த்தையை நிறைவேற்றும்படிக்கு எங்களை இந்த செய்தியோடு உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், ஆமென். 76இப்பொழுது எல்லோரும் ஆழ்ந்த பயபக்தியோடு இருங்கள். தயவு செய்து நகர்ந்து செல்ல வேண்டாம். இருந்தபடியாகவே அமர்ந்து இருங்கள். இப்பொழுது நினைவு கூறுங்கள்...சில நேரங்களில் நாம் போராட்டத்தோடு வந்திருப்போம். இங்கு இருக்கிறவர்களில் எத்தனை பேர் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாய் இருக்கிறீர்கள்? நான் உங்களுடைய கைகளை பார்க்கட்டும். சரி, நல்லது. அப்படியெனில் நான் என்ன பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, இந்த ஸ்திரீதான் வரிசையில் முதலாவது நபரா? இவர் தான் முதலாவது நபர். எனக்குத் தெரிந்தமட்டில் இந்த ஸ்திரீயும் நானும் ஒருவருக்கொருவர் அன்னியர்கள். பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டதைப் போன்று இது ஒரு அழகான காட்சியாக இருக்கிறது. இந்த படர்ந்த காட்சி இயேசு சமாரியா கிணற்று அருகே அவருடைய வாழ்கையில் முதல் முறையாக அந்த ஸ்திரீயை சந்தித்தது போன்று இருக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில் இது தான் எங்களுடைய முதன் முறை சந்திப்பு. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்னியர்கள். அது உண்மையென்றால், மக்கள் அறிந்துகொள்ள உன்னுடைய கரத்தை உயர்த்துவாயா. பாருங்கள் இது தான் எங்களுக்கு முதல் முறை சந்திப்பு. 77இப்பொழுது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கும் பட்சத்தில் இந்த ஸ்திரீயோடு பேசுவதற்கு அவர் கிணற்று அருகே இருந்த ஸ்திரீக்கு செய்தது போல, நான் அறியாத இவள் செய்த காரியம் என்னவென்றும் அல்லது இவளுக்குள்ளாக இருக்கும் பிரச்சனை என்னவென்றும்,அல்லது அது போன்ற காரியத்தை வெளிப்படுத்துவதே ஆகும். இதுவரை நான் இவளைக் கண்டதேயில்லை. இந்த பட்டணத்திற்கே இதுவே என்னுடைய முதல் முறை விஜயமாக இருக்கிறது. ஆகவே எனக்கு அவள் ஒரு அன்னியராக இருக்கிறாள். ஆகவே இப்படிசெய்யும் பட்சத்தில் அது இயேசு கிறிஸ்துவை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராககாட்டுகிறதா?அப்படி இருக்கும் பட்சத்தில், அவருடைய வார்த்தை இருதயத்தின் நினைவுகளை அறிகிற ஒன்றாக இருக்கிறதா? பாருங்கள்? பாருங்கள்? அது அவரை மாறாதவராக நேற்று... 78இதோ இங்கே என்னுடைய கரத்தில் என்னுடைய வேதாகமம் இருக்கிறது. நான் என் வாழ்வில் இதுவரை இந்த ஸ்திரீயைக் கண்டதே இல்லை. தேவன் அதை அறிவார். அவள் இங்கு நின்று கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீ அவ்வளவுதான். இங்கே இருக்கும் மிகவும் அறியப்படாத அன்னியர்களுக்குத் தெரிந்ததைக் காட்டிலும் எனக்கு இந்த ஸ்திரீயைக் குறித்து ஒன்றும் அதிகமாகத் தெரியாது. அது உண்மை என்று அவளும் அறிந்திருக்கிறாள். அவளை எனக்கு தெரியாது. ஆனால் அவர் அறிவார். ஏனென்றால் அவரே வார்த்தையாய் இருக்கிறார். மற்றும் வார்த்தையானது இருதயத்தின் நினைவுகளை வெளிப்படுத்தி அவளுடைய தவறு என்ன என்பதையும் அவளுடைய காரியங்கள் என்ன என்பதையும் வெளிப்படுத்தும். அவள் ஏதாவது ஒரு தவறை செய்துவிட்டு, இரத்தத்தின் கீழாக அதை அறிக்கை செய்யவில்லை என்றால் அவர் அதை அவளுக்கு வெளிப்படுத்துவார். அவள் ஒரு பாவனை விசுவாசியாய் இருப்பாள் என்றாள் அதை அவளுக்கு வெளிப்படுத்துவார். அவள் ஒரு விசுவாசியாய் இருப்பாளென்றால், அதை அவளுக்கு வெளிப்படுத்துவார். அவளுடைய சரீரத்தில் ஏதாவது தொல்லை இருக்குமானால், அவளுக்கு வெளிப்படுத்துவார். அவளுக்கு ஏதாவது காரியம் நடந்திருக்கும் என்றால் அதை அவளுக்கு வெளிப்படுத்துவார். அவரால் இவை எல்லாவற்றையும் சொல்லமுடியும், ஏனென்றால் அவர் தேவன்‚ அவர் எல்லாவற்றையும் அறிவார். எனக்கு அதைக் குறித்துத் தெரியாது. ஏனென்றால் அவளுக்கும் என்னைத் தெரியாது. நானும் அவளை அறியேன். இப்பொழுது அதை அவளுக்கு அந்த விதமாகவே வெளிப்படுத்துவாரானால், பாருங்கள் அது இன்னும் வார்த்தையாகவே இருக்கிறது என்று அறிவீர்கள். எபிரெயர் 4:12-ல் “கர்த்தருடைய வார்த்தை இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும், அதன் நிலைமையை அறிந்திருக்கிறது” என்று கூறுகிறது. 79இப்பொழுது சகோதரியே, இன்றிரவு நீயும் நானும் இங்கு நின்று கொண்டிருக்கும் நேரத்தில் தேவன் நமக்கு இதை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது நான் அல்ல, அவரே என்று நீ அறிவாய். அது அவராகத் தான் இருக்க முடியும். இப்பொழுது வார்த்தையிலே பேசின வண்ணமாய் நான் உன்னோடு ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன். நான் பிரசங்கம் செய்த பிறகு ஏன் உன்னிடம் பேசுகிறேன் என்றால் அவர் கிணற்று அருகே இருந்த ஸ்திரீயிடம் அவளுக்குள் என்ன தொல்லை இருந்தது என்று அறியும் வரை அவளோடு சம்பாஷித்துக் கொண்டிருந்தார். இப்பொழுது தேவன் உன்னுடைய தொல்லையை எனக்கு வெளிப்படுத்துவாரானால் அது உண்மையா அல்லது இல்லையா என்று உனக்கு தெரியும். மற்றும் நீங்கள் எல்லோரும் அதை விசுவாசிப்பீர்களா? இங்கு இருக்கிறவர்களில் யாருக்காவது இந்த ஸ்திரீயைக் குறித்துத் தெரியுமா? யாராவது இருப்பீர்கள் என்றால் உங்களுடைய கைகளை உயர்த்துங்கள். ஓ‚ அநேகர் அவளைக் குறித்து அறிந்திருக்கிறீர்கள். நல்லது. 80கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இதை அருள்வாராக. பாருங்கள். இது வெறும் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தை மாத்திரம் அல்ல. இது மாம்சமான வார்த்தை, வெளிப்படுத்துகிறதும், பேசுகிறதுமாய் இருக்கிறது. இப்பொழுது வேதமானது, நீ இங்கே நின்று கொண்டிருப்பாய், உன்னிடத்தில் இந்த தவறு இருக்கும், நீ எந்த காரணத்திற்காக இங்கு வந்திருக்கிறாய், அல்லது என்ன செய்தாய், இன்னும் அது போன்ற காரியங்களை எல்லாம் சொல்லவில்லை. அது அவ்விதம் சொல்லவில்லை. ஆனால் வார்த்தையானது இறங்கி வந்து அது தேவனுடைய வார்த்தை என்று பிரசங்கியை அடையாளப்படுத்துகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த செய்தி சத்தியமாய் இருக்கிறது. மற்றும் தேவனே அந்த செய்தியை சத்தியம் என்று அடையாளப்படுத்துகிறார். அது சரியாக அடையாளம் காட்டும் பட்சத்தில், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும் முழு சுவிசேஷமும் சத்தியமாக இருக்கும். 81ஒரு காரியத்தைக் குறித்து மிகவும் பதற்றத்துடன் இருக்கிறாய். (அந்த ஸ்திரீயினிடத்தில் பேசுகிறார்). நீ ஏதோ ஒன்றைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய். அது உண்மை. நீ கவலையாய் இருக்கிறாய். சில காலமாக அந்த தொல்லை உனக்கு இருந்து கொண்டிருக்கிறது. அது என்னவெனில் உன்னுடைய பக்க உறுப்பின் நிலையில் இருக்கிறது. உன்னுடைய வலது பக்கத்தில் இருக்கிறது. அது புற்று நோயாக இருக்குமோ எனபயப்படுகிறாய். அது உன்னை எப்பொழுதும் தொல்லைப்படுத்துகிறதாய் இருக்கிறது. உன்னுடைய வலது பக்கம் முழுவதுமாக செயல் இழந்து காணப்படுகிறது. உன்னுடைய வயிற்றில் இருக்கிற தொல்லை உன்னை மிகவும் பெலவீனமாக ஆக்குகிறது. அது உண்மை என்றால், உன்னுடைய கையை உயர்த்து. பயப்பட வேண்டாம், விசுவாசம் கொள்; அவர் உன்னை சுகப்படுத்துவார். விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி ஆமென் என்கிறார்) நல்லது. தேவனுக்கு நன்றி தெரிவித்தலோடு கடந்து சென்று சுகத்தைப் பெற்றுக் கொள். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்; மேல் கைகளை வைக்க விரும்புகிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ஆமென் என்கின்றனர்). 82இப்பொழுது இங்கு ஒரு வெள்ளை நிற மனிதனும் ஒரு கருப்பு நிற பெண்ணும் இருக்கிறார்கள். இது மறுபடியும் அதே காட்சியாய் இருக்கிறது. அதாவது இயேசு யூதனாகவும் சமாரியப் பெண்ணாக அந்த ஸ்திரீயையும் பார்க்கிறோம். அவர் மனுக்குலத்தில் எந்த இன பாகுபாடும் இல்லை என்று காட்டும்படியாக அப்படிச் செய்தார். தேவன்; எல்லோருக்காகவும் மரித்தார். அது சரியே‚ தேவன் எல்லா ஜாதியினரையும் ஒரே இரத்தத்தினால் உண்டாக்கினார். நாம் பிறந்த தேசம் தான் நம்முடைய நிறத்தை மாற்றுகிறது. ஆனால் நமக்குள்ளாக இருக்கிற இதற்கு அதனுடன் எந்த சம்மந்தமுமில்லை. ஆம் அது உண்மையே. இப்பொழுது, நீ ஒரு கிறிஸ்தவள். நீ ஒரு கிறிஸ்தவள் என்று உன்னிடத்தில் இருக்கும் வரவேற்பைக் கண்டு என்னால் உடனடியாக உணரமுடிகிறது. அது உன்னுடைய ஆவியாக இருக்கிறது. இது அவர், “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்”என்று சொன்னதைப் போலவே இருக்கிறது. இப்பொழுது நீ மிகவும் சுகவீனமாய் இருந்து வந்ததைக் காண முடிகிறது. உனக்குப் புற்று நோய் இருக்கிறது என ஒரு பரிசோதனை நிரூபிக்கிறது. அது சரியே. அந்த புற்றுநோய் எந்த இடத்தில் இருக்கிறது என்று அவர் எனக்குச் சொல்லுவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவர்கள் கொடுத்த புள்ளி விவரங்களின் படி அந்த புற்று நோய் பெருங்குடலில் இருக்கிறது. அது சரி என்றால் உன்னுடைய கையை உயர்த்து. இப்பொழுது உன்னை அறிந்திருக்கிற ஏதோ ஒன்று இங்கு நிற்கிறதை அறிவாய். அவர் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? உன்னுடைய விசுவாசம் அவருடைய வஸ்திரத்தை தொடுகிற அளவிற்கு உன்னை இழுத்து அவர் அங்கு என்ன செய்தாரோ அதையே உனக்கும் செய்வார் என்று விசுவாசிக்கும் பட்சத்தில், நம்பிக்கையோடு கடந்து போ, சுகத்தைப் பெற்றுக் கொண்டு சுகமாவாய். சகோதரியே, நீ மாத்திரம் அதை விசுவாசிப்பாயானால் அது நடந்தேறும். அது மிகவும் சுலபமானது. இதை மாத்திரம் செய். சந்தேகப்படாமல். 83நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அன்னியர்கள் என எண்ணுகிறேன். நாம் ஒருவரைஒருவர் அறிந்ததில்லை. ஆனால் தேவன் நம் இருவரையுமே அறிந்திருக்கிறார். தேவன் உன்னுடைய தொல்லை என்ன என்பதை எனக்கு வெளிப்படுத்துவார் என விசுவாசிக்கிறாயா? யாருடைய பிரச்சனையையும் தேவன் எனக்கு வெளிப்படுத்துவார் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கிருக்கிறவர்களில் எத்தனைப் பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் ஆமென் என்கின்றனர்). அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயா? அப்படியானால் உன்னுடைய பித்தப்பை கல் உன்னை இனி ஒருபோதும் தொல்லைப்படுத்தாது. “நான் மக்களின் எண்ணங்களைப் படிக்கிறேன்” என்று சிலர் நினைக்கிறது என் உணர்வுக்கு வருகிறது. ஆனால் இதைச் செய்கிறது நானல்ல என்று நீங்கள் அறிய விரும்புகிறேன். நல்லது, நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? (நான் விசுவாசிக்கிறேன் என அந்த சகோதரி கூறுகிறார்). உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? (என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்) நன்றி. நீ ஒரு கிறிஸ்தவள் (ஆம்) நீ ஒரு உண்மையான கிறிஸ்தவள். ஏதோ பெயர் கிறிஸ்தவளாக அல்ல. நீ மறுபடியும் பிறந்த கிறிஸ்தவள். 84அது சரியே. இப்பொழுது நான் உன் சகோதரனாயிருக்க உன்னைக் குறித்து ஒன்றும் அறியாமல் இருந்தும், நம் இருவரையும் அறிந்த பரலோகப்பிதா உன்னுடைய தொல்லை என்ன என்று எனக்கு வெளிப்படுத்துவார் என விசுவாசிக்கிறாயா? (நான் விசுவாசிக்கிறேன்). உன்னிடத்தில் அநேக காரியங்கள் இருக்கிறதை நான் காண்கிறேன். ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறுவை சிகிச்சையானது புற்று நோயிற்காக செய்யப்பட்டது. ஒரு மார்பகத்தை எடுத்துவிட்டாய். அது சரியே. ஆனால் இன்னுமாக அது உன்னை தொல்லைப் படுத்துகிறது. அதிலிருந்து இந்நேரமுதல் நீ சுகமடையப் போகிறாய் என விசுவாசிக்கிறாயா?அப்படியே உன் முழு இருதயத்தோடு விசுவாசித்து இங்கிருந்து கடந்து செல். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய தேவன் தாமே உன்னைசுகப்படுத்துவாராக. விசுவாசத்தோடு இருங்கள். சந்தேகப்படாதிருங்கள். அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் என உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 85இப்பொழுது சீமாட்டியே நீ விசுவாசிக்கிறாயா? நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அன்னியர்களாக இருக்கிறோம். நான் உன்னை அறியேன். உனக்கு என்னைத் தெரியாது. நாம் முற்றிலுமாக அன்னியர்கள். ஆனால் பரலோகப் பிதா உன்னுடைய தவறு என்னவென்பதையும், அல்லது நீ செய்யக் கூடாத ஒன்றை செய்ததையும், அல்லது நீ செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்ததையும், அல்லது எதுவாக இருந்தாலும் சரி, அதை தேவன் எனக்கு வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் என விசுவாசிப்பாய் அல்லவா? அப்போது அது அவரால் மாத்திரம் செய்ய முடியும் என நீ அறிந்துகொள்வாய். அது சரியா? நீ ஒரு வளர்ச்சியினால் தொல்லைக்குள் அவதிப்படுகிறாய். அந்த வளர்ச்சி உன்னுடைய தலையில் இருக்கிறது. அதைக் குறித்து பயந்து போயிருக்கிறாய். அது சரியே. இப்பொழுது அது உன்னை விட்டு நீங்கும்படி இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குவார் என விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆக கடவது. விசுவாசத்தோடே கடந்து செல். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. விசுவாசத்தோடு உன் பாதையில் கடந்து செல். சந்தேகப்படாதிரு. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. அது போதும். விசுவாசம் கொண்டிரு. சந்தேகப்படாதிரு. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. 86உன்னுடைய வயிற்றுத் தொல்லை உன்னை மிகவும் வேதனைப் படுத்துகிறது. அது உன்னுடைய வயிற்றுப் பிரச்சனையாய் இருக்கிறது. சாப்பிட ஆசைப்படுகிறாயா? விசுவாசி. அது போதும். எப்படி இருக்கிறாய்? நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அன்னியர்கள். நான் உன்னை அறியேன். நீயும் என்னை அறிந்ததில்லை. ஆனால் இங்கு உனக்கும் எனக்கும் நடுவில் காணக்கூடாதவராய் ஒரு திரையிட்டுக் கொண்டவராய், உன்னுடைய தொல்லை என்ன என்பதை அறிந்தவர் இங்கு இருக்கிறார். நீ மூட்டுவாதத்தினால் வேதனைப் படுகிறதைப் பார்க்கிறேன். அதிலிருந்து அவர் உன்னை சுகப்படுத்துவார் என விசுவாசிக்கிறாயா? (அதற்கு அந்த சகோதரி ஆம் என்கின்றார்) விசுவாசத்தோடே கடந்து செல். விசுவாசத்தோடு இருக்கும் பட்சத்தில் அது உன்னை ஒருபோதும் முடமாக்காது. உன்னை தொல்லைப்படுத்தக் கூடிய அநேக காரியங்கள் உனக்கு உண்டு. அநேக நாட்களாக ஸ்திரீகளுக்குள்ள தொல்லை உனக்கு இருக்கிறது. மற்றொரு தொல்லையும் இருக்கிறது. மூட்டுவாதத்தினின்று சுகத்தை பெறுவதே உன்னுடைய முக்கியமான காரியமாக இருக்கிறது. அவர் உன்னை சுகப்படுத்துவார் என விசுவாசிக்கிறாயா? விசுவாசத்தோடே கடந்து செல். சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு இரு. அது போதும். 87நான் உனக்கும் ஒரு அன்னியன். உன்னை இதுவரை என் வாழ்வில் கண்டதே இல்லை. (இன்னொரு ஸ்திரீ தோன்றிக் கொண்டேயிருக்கிறாள்). உன்னைக் குறித்து தேவன் எனக்கு ஏதாவது வெளிப்படுத்துவாரானால்... ஆம், ஆம், அது ஒரு கட்டி அறுவை சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறாய். அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த ஸ்திரீயும் அதே கட்டியினால் அவதிப்படுகிறாள். நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? விசுவாசிக்கிறாயா? நீங்கள் விசுவாசிப்பீர்களானால் தேவன் உங்கள் இருவரையும் சுகமாக்குவார். அவள் மேலாக உன் கையை வை. அவ்வளவுதான். சகோதரியே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நீ சுகமடைவாயாக. 88நண்பர்களே. அது எப்படி என்று என்னை கேட்காதேயுங்கள். பாருங்கள், என்னால் அதை விவரிக்கமுடியாது. அது அழுத்தம் அல்லது வல்லமை அல்லது அது... கட்டி என்றால் என்ன? அது ஒரு வளர்ச்சி. வளர்ச்சி என்றால் என்ன? அது உயிரணுக்களின் பெருக்கம் என்று அர்த்தம். அப்படி என்றால் நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள்? நீங்களும் உயிரணுக்களின் பெருக்கமாகவே இருக்கிறீர்கள். கட்டி என்றால் என்ன? வேதம், அது பெரும் வேதனை தருகிறதென்றும், பிசாசு என்றும் கூறுகிறது. பாருங்கள், அது அவனை உதவிக்காக கூக்குரலிடும்படி செய்தது. மற்றும் அது அவருக்கு பிரதியுத்தரம் கொடுத்தது. பாருங்கள் இரண்டுமே பார்ப்பதற்கு ஒன்றாகத் தான் இருக்கிறது. அது அவ்விதமாகத் தான் இருக்கும். நல்லது. 89வா, சீமாட்டியே. நாம் இருவருமே ஒருவருக்கொருவர் அன்னியராயிருக்கிறோம். நீண்ட நாட்களாக உனக்கு நரம்புப் பிரச்சனை இருந்தது. அதுவே உன் வயிற்றுப் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கிறது. உன் ஜீரண உறுப்பு புண்ணாக இருக்கிறது. மற்றும் உன் வயிற்றுக்குப் புளிப்பை ஏற்படுத்துகிறது. அது உன்னுடைய பற்களைக் கூசும்படி செய்கிறது. அது போன்று ஏதோ. இப்பொழுது இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குவார் என விசுவாசிக்கிறாயா? (அதற்கு அந்த சகோதரி ஆமென் என்கின்றார்) சரி, அப்படியென்றால் நீ போய் உன்னுடைய இரவு ஆகாரத்தைப் புசி. உன் முழுஇருதயத்தோடும் விசுவாசி. இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குவார். வெறுமனே விசுவாசி. (அல்லேலூயா இயேசுவே உமக்கு நன்றி). நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அன்னியராய் இருக்கிறோம். தேவன் ஒரு மனிதனுக்குள்ளாக எங்கு இருக்கிறார் தெரியுமா? இருதயத்திற்குள் ஜீவிக்கிறார். அங்கு தான் உன்னுடைய பிரச்சனையும் இருக்கிறது. இந்த பிரச்சனை ஏதோ அங்கே தேவன் குறைவாக இருக்கிறதினால் வரவில்லை. அந்த கோளாறு குணமாகும்படி உன்னுடைய விசுவாசத்தை மாத்திரம் செயல்படுத்து. அப்பொழுது நீ குணமாவாய். உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து கடந்து செல். சந்தேகப்படாமல் விசுவாசத்துடன் கடந்து செல். 90“உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால் எல்லாம் கூடும்”. எத்தனைப் பேர் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீhகள். (சபையார் ஆமென் என்கின்றனர்) தேவன் உங்களை சுகப்படுத்தும்படி இங்கு இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? வார்த்தை மாம்சமானதா? (ஆமென்). அது என்ன? இப்பொழுது, நான் எவ்வளவு விசுவாசித்தாலும் அது காரியம் அல்ல. பாருங்கள், நீங்களும் விசுவாசிக்க வேண்டும், பாருங்கள். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட ஸ்திரீ அவரை விசுவாசித்தாள். அங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்கிற மனிதன் என்னையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அண்ட வாதம் மற்றும் மூலம் வியாதியினால் அவதிப்படுகிறார். தேவன் உம்மை சுகமாக்குவார் என விசுவாசிக்கிறீரா? நீர் அப்படிச் செய்யும் போது நீர் கேட்டுக் கொள்வது எதுவோ அதைப் பெற்றுக் கொள்வீர். வியாதியஸ்தர்களையும்,பாதிக்கப்பட்டவர்களையும் தேவன் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறவர்கள் யாராவது இருக்கிறீர்களா? இன்றிரவு அந்த வார்த்தை இருதயத்தின் நினைவுகளை அறிந்திருக்கிறது என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது நாம் முடிக்க வேண்டிய நேரத்தை காட்டிலும் மிகவும் தாமதமாகி விட்டோம். 91இப்பொழுது நீங்கள் இதை எப்படி விசுவாசிக்கிறீர்கள்? வேத வசனமானது வெளிப்படையாய் பிரத்தியட்ச்மானதை பார்த்தீர்கள். மாம்சத் திரை உங்களை தொல்லைப் படுத்த அனுமதியாதிருங்கள். நினைவில் கொள்ளுங்கள். இது தான் இன்றைய நாளுக்கான வாக்குரைக்கப்பட்ட வார்த்தையாய் இருக்கிறது. எத்தனை பேர் இதைப் புரிந்துக் கொண்டீர்கள்? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை. நீங்கள் எத்தனை போலியானவைகளைப் பார்த்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு இதை இயேசுகிறிஸ்துவானவர் வாக்குத்தத்தம் பண்ணினார், இது சத்தியம். இது உண்மை. இப்பொழுது அவர் இந்த பூமியை விட்டு வானத்திற்கு எடுத்துக் கொள்ளும் முன்னே அவருடைய கடைசியான வார்த்தையை மாற்கு 16-ல் “நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். அதை விசுவாசித்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கிணைக்குள்ளாக தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்தஅடையாளங்கள் பின் தொடரும்” என்று சொல்லவில்லையா? நீங்கள் அதை எப்பொழுதாவது வாசித்திருக்கிறீர்களா? அவருடைய கடைசியான கட்டளை என்னது? “அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்”. அது உண்மை என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள். (சபையார் ஆமென் என்கிறார்கள்). 92இப்பொழுது சில நிமிடங்களுக்கு முன்பாக எல்லோரும் உங்களுடைய கைகளை உயர்த்தி நான் விசுவாசி என்று தெரியப்படுத்தினீர்கள். அப்படியென்றால் நீங்கள் உங்கள் கைகளை ஒருவர் மேல் ஒருவர் வைக்கமாட்டீர்களா? நாம் இப்படியாக தொடர்ந்து போகவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர் இங்கு இருக்கிறார். நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கும் பட்சத்தில் நீங்கள் ஏன் உங்களுடைய கைகளை உங்களுக்கு அருகாமையில் அமர்ந்திருப்பவர்கள் மேல் வைத்து ஜெபிக்கக்கூடாது? இப்பொழுது, எனக்கு மாத்திரம் என்று இல்லை. அது உங்களுக்கும். உங்கள் ஒவ்வொருவருக்கும் என்று கூறியிருக்கிறார். அதை விசுவாசிக்கிறீர்களா? ஆமென் என்று சொல்லுங்கள். (சபையார் ஆமென் என்கின்றனர்) நல்லது. இப்பொழுது உங்களுக்காக ஜெபிக்க வேண்டாம் ஏனென்றால் உங்கள் மேல் கையை வைத்தவர்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள். மற்றும் நான் உங்கள் யாவருக்காகவும் ஜெபிக்கப் போகிறேன். நீங்கள் ஒரே மனதோடு விசுவாசிப்பீர்களானால் நீங்கள் கண்டவைகளில் இதுவே மகத்தான நேரமாய் இருக்கும். 93இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் சபையை ஒளிரச் செய்ய வேண்டியதாய் இருக்கும். இந்த கடைசி நாட்களில் ஸ்தாபனங்களும், கோட்பாடுகளும், தத்துவங்களும் மற்ற எல்லா காரியங்களும் வார்த்தையை அமிழ்த்தி வார்த்தையாகிய இயேசுவை சபைக்கு வெளியே தள்ளிப் போட்டது. ஆனாலும் அவர் “கடைசி நாட்களில் மனுஷ குமாரன் வெளிப்படும் நாட்களில்” என்று சொன்ன படியாக வந்து தன்னுடைய மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் ஞானஸ்நானத்திலே வெளிப்பட்டார். தெய்வீக சுகமளித்தலிலே வெளிப்பட்டார். இப்பொழுது அவர் தம்முடைய கடைசித் தன்மையில் இருந்து வருகிறார். நினைவில் கொள்ளுங்கள் அதை தான் ஆபிரகாம் கண்டான். அவனுக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் “ஈசாக்கு” காட்சியில் வருவதற்கு முன்பாகவும், புறஜாதி உலகமானது அக்கினியினால் நியாயம் தீர்க்கப்படுவதற்கு முன்பாகவும் அது நடந்தேறினது. இயேசு கிறிஸ்துவானவர் தோன்றும் வரையில் கிறிஸ்தவ சபை பார்க்கிற அற்புத அடையாளங்களில் இதுவே கடைசியானதாய் இருக்கிறது. தேவன் உங்களுக்கு முன்பாக இதைச் சொல்ல அனுமதிப்பாரானால், கர்த்தருடைய நாமத்தில் நான் சொல்வதை விசுவாசியுங்கள். வேதத்தில் சொல்லப்பட்டவைகளையெல்லாம் பார்க்கும்போது மிருகத்தின் முத்திரையை தவிர வேறொன்றும் விட்டு வைக்கப்படவில்லை. ஆகவே தேவனுடைய முத்திரையை பெற்றுக் கொள்ளுங்கள். 94உங்களுக்கு அருகாமையில் அமர்ந்திருக்கும் நபருக்காக ஜெபியுங்கள். உங்களுடைய கையை அவர்கள் மேல் வையுங்கள். முடவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருவரும் இல்லை. அந்த படுக்கையில் இருக்கிறவர்... அவர் ஏற்கனவே... நல்லது. உங்களுடைய கைகளை ஒருவர் மீது ஒருவர் வைத்து ஜெபியுங்கள். 95அன்பான இயேசுவே, ஜீவிக்கின்ற மகத்தான தேவனுடைய பரிசுத்த குமாரனே, இன்றிரவு பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இங்கு இருக்கிறவரே, அவர் தன்னுடைய ரூபத்தை மாற்றி இந்த மாமிச சரீரத்தில் வந்து வார்த்தையை வெளிப்படுத்தி புருஷர்கள் மற்றும் ஸ்திரீகளுடைய வாழ்கையில் நடந்தவைகளை வெளிப்படுத்தி, நீர் இன்னும் ஜீவிக்கின்றீர் என்பதை காண்பிக்கிறீர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். கர்த்தாரகிய இயேசுவே, இந்த பெரிய பட்டணமாகிய தோப்பிகாவில் உம்முடைய பிள்ளைகளோடு நாங்கள் கூடி இருக்கிற வேளையில், நீர் அவ்வளவாய் எங்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் கொண்டீர். இப்பொழுது நீர் கூறின உம்முடைய கடைசியான கட்டளையாகிய “அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கையை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்ற வார்த்தையை நிறைவேற்றும் படியாக ஜெபிக்கிறோம்.இப்பொழுது அறிக்கை செய்தவர்களும், ஆவியிலே மறுபடியும் பிறந்தவர்களும், உம்முடைய வார்த்தையோடும், உம்முடைய கட்டளையோடும் இனங்கண்டுக் கொள்ள தங்கள் கைகளை ஒருவர் மீது ஒருவர் வைக்கிறார்கள். 96இப்பொழுது, பிசாசே, நீ இந்த வியாதியஸ்தர்களை இனி ஒருபோதும் பிடித்துவைக்க முடியாது. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்குட்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய சரீரத்தில் இருக்கும் வியாதியே அவர்களை விட்டு வெளியேவா. அவர்களை இனி ஒருபோதும் துன்புறுத்தாதே. இந்த இரவின் பொழுதில் இருந்து அவர்கள் விடுதலையோடு போவார்களாக. தேவனுடைய ஊழியக்காரராக அவருடைய வார்த்தையை உறுதிசெய்யும்படியாக; எங்களை அடையாளப்படுத்திக் கொண்டு; எங்கள் மத்தியில் மாம்சத்தில் வெளிப்பட்ட ஜீவனுள்ள தேவனுடைய நாமமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உனக்குச் கட்டளையிடுகிறோம். அவர்கள் தேவனுடைய இராஜ்யத்திற்காக தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையின்படி இந்த வியாதியஸ்தர்களிலிருந்து வெளியே வா; அவர்களைப் போகவிடு. ஆமென். 97இப்பொழுது எந்த ஒரு சந்தேகத்தின் நிழலும் இல்லாமல் இந்த ஷகினா மகிமையின் திரைக்குள்ளாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானது (அதை இந்த வாரத்தில் மேலும் பார்க்கலாம்) எங்கள் கண் முன்னே பிரத்தியட்சயமானது என்று விசுவாசித்து உங்களுடைய சுகத்தை ஏற்றுக் கொள்கிற யாவரும் எழுந்து நின்று, “என்னுடைய சுகத்தை ஏற்றுக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்து என்னை சுகமாக்கினார், என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் பெற்ற சுகத்துக்காக உங்களுடைய சொந்த வழியிலே அவருக்கு நன்றியை தெரிவியுங்கள். ஆமென்.